மறைந்த முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி பாதுகாப்பு அதிகாரியிடம் ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டார்: நீதிமன்றத்தில் சாட்சியம்

மறைந்த முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் (C.D. Wickramaratne) மரணம் குறித்த நீதிவான் விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது சாட்சியமளித்த அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தனது கடமை நேர ஆயுதத்தையும் தோட்டாிகளையும் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி வாங்கிச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடுவேல நீதிவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில்  சாட்சியமளித்த சார்ஜன்ட் (697) சுசாந்த, “திரு. விக்கிரமரத்ன இதற்கு முன்னர் ஒருபோதும் எனது கடமை நேர ஆயுதத்தைக் கேட்டதில்லை என்பதால் இது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

மேல் மாகாண (தெற்கு) விசாரணைப் பிரிவினர் இந்த விசாரணையில் சாட்சியங்களை முன்னிலைப்படுத்தினர்.

“முன்னாள் பொலிஸ் மாஅதிபரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நான் 16 ஆண்டுகளுக்கும் மேலாகச் பணியாற்றியுள்ளேன், ஆனால் அவர் பரிசோதிப்பதற்காக எனது கடமை நேர ஆயுதத்தை ஒருபோதும் கேட்டதில்லை. இருப்பினும், சம்பவம் நடந்த அன்று அவர் எனது கடமை நேர ஆயுதத்தைக் கேட்டார், ஆயுதத்தைப் பெற்ற பிறகு தோட்டாிகளையும் கேட்டார். அவர் உடற்பயிற்சிக்காக வெளியே செல்லும்போதெல்லாம் காலணிகளை அணிவார், ஆனால் அந்தத் துரதிர்ஷ்டவசமான நாளில் அவர் காலணிகளை அணியவில்லை. மேலும் உடற்பயிற்சிக்குச் செல்லும்போது அவர் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வதில்லை. நான் அவருக்குத் துப்பாக்கியையும் தோட்டாிகளையும் கொடுத்த பிறகு, எனக்கு ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வருமாறு கூறினார். நான் வெளியே அடியெடுத்து வைத்த உடனே, துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. நான் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது அவர் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டேன். வீட்டில் இருந்த மற்றவர்களின் உதவியுடன் அவரை முல்லேரியாவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிந்து கொண்டேன்” என்று சார்ஜன்ட் சுசாந்த மேலும் தனது சாட்சியத்தில் சமர்ப்பித்தார்.

துப்பாக்கி மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகளை (Spent cartridges) அறிக்கைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

முன்னாள் பொலிஸ் மாஅதிபரின் மரணம் குறித்து முல்லேரியாவ ஆதார மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி (JMO) திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்