மழை இல்லாவிட்டாலும் மூன்று மாதங்களுக்குத் தடையற்ற நீர் விநியோகத்திற்கு உத்தரவாதம்: வீடமைப்பு அமைச்சர் அறிவிப்பு

மழை பெய்யாவிட்டாலும் கூடத் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்குத் தடையற்ற குடிநீர் விநியோகத்தை வழங்க முடியும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

லபுகம நீர்த்தேக்கத்திற்கு மேற்கொண்ட அவதானிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

கணிக்கப்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தின் சாத்தியமான தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க கூறினார்.

தற்போதுள்ள நீர் வளங்களைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதே முக்கிய சவாலாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிபுணர்களின் தரவு பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடுகளின்படி, இக்காலப்பகுதியில் மழை பெய்யாவிட்டாலும் கூட, லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் மட்டம் மூன்று மாதங்களுக்குத் தடையற்ற விநியோகத்தைப் பேணப் போதுமானதாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மேல் மாகாணத்திற்கான நீர் விநியோக நடவடிக்கைகள் களனி கங்கை, களு கங்கை மற்றும் லபுகம – கலடுவாவ நீர்த்தேக்கங்கள் ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களை நம்பியே அமைந்துள்ளதாகவும், தற்போதைய நீர் கொள்ளளவின் அடிப்படையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எந்தவித ஆபத்தும் எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து