மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பல கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவசர மனித உரிமைகள் தலையீட்டிற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கைதிகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் (CPRP) ,நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மகர சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பல கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
சிறைச்சாலையினுள் மிகவும் கடுமையான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவசர அறிவிப்பொன்றின் மூலம் CPRP தெரிவித்துள்ளது. இதன்போது பல கைதிகள் உயிரிழந்துள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு .தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ள அக்குழு, காயமடைந்தவர்களுக்கு ஏனைய கைதிகள் அருகில் சென்று உதவி செய்வதை அதிகாரிகள் தடுத்து வருவதாகவும் உரிமை கோரியுள்ளது.
சிறைச்சாலையினுள் நிலவும் சூழல் அச்சமூட்டுவதாகவும், மனிதநேயக் கோணத்தில் மிகவும் பாரதூரமானதாகவும் காணப்படுவதாக CPRP விவரித்துள்ளது.