-
வெளிநாட்டு முதலீட்டுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஹனிஃப் யூசூப்
-
இந்தியாவை அச்சுறுத்தும் அயல்நாடாகப் பார்ப்பதை விடுத்து, இலங்கையின் சந்தையின் நீட்சியாகப் பார்க்கும் மனநிலை மாற்றம் தேவை என அழைப்பு விடுக்கிறார்.
-
இலங்கையை பிராந்திய உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் சுற்றுலா மையமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றின் விரைவான விரிவாக்கத்திலிருந்து பயனடையும் வகையில் இலங்கை தனது பொருளாதார உறவை இந்தியாவோடு அடிப்படையாக மறுபரிசீலனை செய்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு முதலீட்டுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஹனிஃப் யூசூப் நேற்று தெரிவித்தார். இந்தியாவின் எழுச்சியை நாடு இன்னும் முழுமையாகப் பாராட்டாத “தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு” என்று அவர் வர்ணித்தார்.
‘இந்தியா காலிங்’ (India Calling) மன்றத்தில் முக்கிய உரை நிகழ்த்திய அவர், உலகளாவிய பொருளாதார ஈர்ப்பு மையம் இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும், உலகின் பல நாடுகளும் அதன் விரிவடைந்து வரும் நுகர்வோர் சந்தையை அணுக நெருக்கமான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை நாடுதாகவும் குறிப்பிட்டார்.
“உலகம் இந்தியாவை எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிட்ட யூசூப், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த நாடுகள் சமீபத்திய வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஆழமான பொருளாதார ஈடுபாடுகளைத் தொடர்வதை சுட்டிக்காட்டினார்.
“பொருளாதார ஈர்ப்பு மையம் எங்கு நகர்கிறது என்பதை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். இன்றைய இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கதைகளில் ஒன்றாகும்” என்று அவர் மேலும் கூறினார்.
வேறு சில நாடுகள் மட்டுமே பெற்றுள்ள தனித்துவமான மூலோபாய நன்மை இலங்கைக்கு இருப்பதாக யூசூப் கருத்து தெரிவித்தார். “இலங்கையைப் பொறுத்தவரை, இது உலகின் மறுமுனையில் உள்ள வாய்ப்பல்ல. இது நமது வீட்டு வாசலில் உள்ள ஒரு வாய்ப்பாகும்” என்றார் அவர்.
வணிக சிந்தனையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கோரிய அவர், இந்தியாவை ஒரு “அச்சுறுத்தும்” சந்தையாகப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அதைத் தங்கள் உள்நாட்டுச் சந்தையின் இயற்கையான நீட்சியாகக் கருத வேண்டும் என்று இலங்கை நிறுவனங்களை வலியுறுத்தினார்.
பரவலான சந்தேகங்களுக்கு மத்தியிலும் தனது சொந்த தளவாட வணிகத்தை இந்தியாவில் விரிவுபடுத்திய தனது அனுபவத்தை நினைவு கூர்ந்த யூசூப், இந்தியாவின் பல்வேறு பிராந்திய சந்தைகளில் கிடைக்கும் வாய்ப்புகளை பல தொழில்முனைவோர் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்றார்.
“இந்தியா மிகவும் பெரியது மற்றும் அச்சுறுத்தலானது என்று எல்லோரும் என்னிடம் கூறினார்கள். நான் அதைக் கேட்கவில்லை,” என்று கூறிய அவர், இறுதியில் தனது நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சுங்க தரகு நிறுவனங்களில் ஒன்றாக மாறியது என்பதைக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் வெற்றி பெற முழு சந்தையையும் கைப்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். “பல இலங்கை நிறுவனங்களைப் பொறுத்தவரை, முதல் நோக்கம் இந்தியாவைக் கைப்பற்றுவது என்பதல்ல. அது வெறுமனே ஒரு இந்திய மாநிலத்திலோ, ஒரு நகரத்திலோ அல்லது ஒரு நுகர்வோர் பிரிவிலோ வெற்றி பெறுவதாகும். அது மட்டுமே நமது வணிகங்களின் அளவை மாற்றியமைக்க முடியும்” என்று அவர் விளக்கினார்.
நாட்டின் ஒப்பீட்டளவில் சிறிய உள்நாட்டு சந்தையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள இலங்கை நிறுவனங்கள் 1.4 பில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரைக்கொண்ட அண்டை பொருளாதாரத்தை அணுக முடியும் என்று அவர் கூறினார்.
இதேபோல், இலங்கையின் சந்தை அளவைத் தாண்டி அதன் மூலோபாய இருப்பிடம், நவீன துறைமுகங்கள், சுற்றுலா சாத்தியங்கள் மற்றும் தென்னிந்தியாவின் இணைப்பு ஆகியவற்றை இந்திய வணிகங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றும் யூசூப் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவைத் தாண்டிய சந்தைகளை அணுக விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை ஒரு பிராந்திய உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் சேவைகள் தளமாகச் சேவை செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
“இந்திய வணிகங்கள் உற்பத்தி செய்ய, சேவைகளை வழங்க, பிராந்திய நடவடிக்கைகளை நிறுவ மற்றும் இலங்கைக்கு அப்பால் உள்ள சந்தைகளுடன் இணைக்கக்கூடிய ஒரு தளமாக இலங்கையைப் பாருங்கள்” என்றார் அவர்.
இந்தியா ஏற்கனவே இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டு கூட்டாளிகளில் ஒன்றாக இருந்தாலும், வளர்ந்து வரும் இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகளில் மிகப் பெரிய பங்கை நாடு ஈர்க்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு அபரிமிதமான வாய்ப்புகளை அளிக்கிறது என்றும் யூசூப் கூறினார்.
இந்தியா ஏற்கனவே இலங்கையின் மிகப்பெரிய மூல சந்தையாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், செலவிடத்தக்க வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோடிக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடு பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
கடற்கரைகள், வனவிலங்குகள், ஆரோக்கியம், ஷாப்பிங், உணவு, திருமணங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றைத் தேடும் இந்தியப் பயணிகளுக்கு இலங்கை ஏன் விருப்பமான வார இறுதி மற்றும் குறுகிய கால இலக்காக மாறக்கூடாது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“நாம் இந்தியாவின் அளவைப் பிரதி எடுக்க வேண்டிய அவசியமில்லை. நாம் நம்மை intelligend-ஆக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் அவர்.
கல்தி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் அதிகப்படியான ஒத்துழைப்பை ஊக்கப்படுத்திய அவர், நீடித்த பொருளாதார கூட்டாண்மைகள் இறுதியில் வலுவான மக்கள் இடையேயான உறவுகளின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன வாதிட்டார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அச்சுறுத்தலாகப் பார்ப்பதை விட இலங்கையானது அதை ஒரு வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யூசூப் கூறினார்.
“இந்த உறவை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், இந்தியாவின் எழுச்சி இலங்கையின் எதிர்கால வாய்ப்புகளைக் குறைக்காது. இந்தியாவின் எழுச்சி இலங்கையின் சொந்த எதிர்காலத்தை விரைவுபடுத்துகிறது” என்றார் அவர்.
