இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதியேற்பு

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang), கொழும்பில் தனது புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ள நிலையில், சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளார்.

ஆகஸ்ட் 11 அன்று இலங்கை வந்தடைந்த தூதுவர் வெய், இலங்கைக்கான விசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராகச் சீனக் குடியரசுத் தலைவர் ஷி ஜின்பிங்கால் (Xi Jinping) நியமிக்கப்பட்டதை “பெரும் கௌரவமாகவும் பாக்கியமாகவும்” கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

தனது வருகையின் போது நிகழ்த்திய உரையில், பண்டைய பட்டுப் பாதை மற்றும் ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் (Rubber-Rice Pact) வரலாற்றுத் தொடர்புகள், அத்துடன் சீனாவின் ‘ஒரு மண்டலம் ஒரு பாதை’ (Belt and Road Initiative) திட்டத்தின் கீழ் சமீபத்திய ஒத்துழைப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பிணைப்பை அவர் முன்னிலைப்படுத்தினார்.

சீனா-இலங்கை நீர் தொழில்நுட்ப கூட்டு ஆராய்ச்சி மற்றும் விளக்க மையம் (China-Sri Lanka Joint Research and Demonstration Centre for Water Technology) மற்றும் இலங்கை மாணவர்களுக்காக சீனா சீருடைத் துணிகளை வழங்கியமை உள்ளிட்ட திட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இருநாட்டு மக்களுக்குப் புலப்படக்கூடிய நன்மைகளை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயங்களின் போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் நடத்திய சந்திப்புகளையும் தூதுவர் நினைவு கூர்ந்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளுக்குப் புதிய மூலோபாய வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“சீனா தனது அயலுறவு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது,” என்று கூறிய வெய், இரு நாடுகளும் அபிவிருத்திப் பங்காளிகள் என்றும், “இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் நல்ல சகோதரர்கள் மற்றும் நல்ல நண்பர்கள்” என்றும் வர்ணித்தார்.

அபிவிருத்தி உத்திகளை சீரமைப்பதை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுப் பங்கான்மையை ஆழப்படுத்தவும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டானது சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 70 வது ஆண்ட நிறைவையும், ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கையெழுத்தாகி 75 வது ஆண்ட நிறைவையும் குறிக்கும் என்பதை வெய் சுட்டிக்காட்டினார்.

பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்லவும், ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இலங்கையிலுள்ள சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் தனது சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாகத் தூதுவர் உறுதியளித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா