வடக்கு மாகாண ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டும். அதன் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதுடன், தொடர்புடைய அதிகாரிகளின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கி இப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை இலகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் முன்னேற்றம், அதன் நடைமுறைப்படுத்தலில் எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகால நிர்வாகத் தடைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த மே மாதம் ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ நிகழ்வின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களுக்கு தனித்தனியாகச் சென்று அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையைத் தவிர்த்து, ஒரே இடத்தின் ஊடாக தேவையான அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இப்பொறிமுறை உருவாக்கப்பட்டது.
 கலந்துரையாடலில், இப்பொறிமுறையின் செயற்பாட்டு முன்னேற்றம், முதலீட்டு முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகள், திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவையை வழங்குவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்துடன், முதலீட்டு வாய்ப்புகள், அனுமதி நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் சேவைகள் குறித்த தகவல்கள் தெளிவாகவும் இலகுவாகவும் முதலீட்டாளர்களைச் சென்றடையும் வகையில் நுழைவாயிலை மேலும் பயனுள்ளதாக்குவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.
முகாமைத்துவக் கழகம் மற்றும் வவுனியாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன் இந்த ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் வடக்கு முதலீட்டு மாநாட்டின் திட்டத் தலைவர் இந்திர கௌசல் ராஜபக்ச, முகாமைத்துவக் கழகத்தின் நிர்வாகப் பிரிவுத் துணைத் தலைவர் சாந்தி பகீரதன் மற்றும் முகாமைத்துவக் கழகத்தின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவர் அநுராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை