சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் – அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் தடைகளை விதித்துள்ள போதிலும் சர்வதேச நீதிமன்றம் தனது பணிகளை முன்னர்போன்று தொடரும் என அதன் தலைவர் டொமோகோ அக்கேன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ள போதிலும் சர்வதேச நீதிமன்றம் தனது பணிகளை சுயாதீனமாகவும் நியாயமான விதத்திலும் முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றம் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை தொடர்ந்தும்சுயாதீனம் மற்றும் பக்கச்சார்பின்மையுடன் முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை டிரம்ப் நிர்வாகம் ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்திற்கான நிதியை நிறுத்துதல்,அதனுடனான வர்த்தக தொடர்புகளை நிறுத்துதல் உட்பட பல நடவடிக்கைகளை அறிவித்தது.
இதனடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்துடன் தொடர்பை பேணும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் அடுத்த ஆறு மாதத்திற்குள் அதனை முடிவிற்கு கொண்டுவரவேண்டும். என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்புநாடுகள் இல்லை என்ற போதிலும் நீதிமன்றம் தனது அதிகாரத்தை மீறி அமெரிக்காவையும் இஸ்ரேலையும் சேர்ந்தவர்களை விசாரணை செய்கின்றது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் போன்ற சர்வதேச குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரணை செய்கின்றது.உலகின் 125 நாடுகள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளன.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த புதிய தடைகள் அமைந்துள்ளன.டிரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிலருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய தடைகள் தனது பணிகளில் தலையிடும் அச்சுறுத்தும் நோக்கத்தை கொண்டவை என தெரிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தான் தொடர்ந்தும் செயற்படுவத்கான நிதி வளங்களை உறுப்பு நாடுகள் வழங்கவேண்டு;ம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு