கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? பொலிஸார் தெரிவிப்பது என்ன?

விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தாக்கப்பட்டார் என்பதை மறுத்துள்ள பொலிஸார் ஆர்ப்பாட்டத்தின் போது கால்தடுக்கி கொங்கிறீட் கல் ஒன்றின் மீது அவர் விழுந்தார் என தெரிவித்துள்ளனர்.
பிரீத் ஓதிக்கொண்டிருந்த பௌத்தமதகுருமார் மீது தாக்குதல் இடம்பெற்றதாக வெளியாகும் தகவல்கள் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே கருவாத்தோட்ட பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
விகாரமகாதேவி பூங்காவில் தற்காலிக கூடாரத்தை அமைப்பதற்கு பௌத்தமதகுருமார் முயன்றவேளையே பொலிஸார் தலையிட்டனர்.
அவர்களின் நடவடிக்கைகள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டவை அல்ல என பொலிஸார் அவர்களுக்கு தெரிவித்தனர்.
அதன் பின்னர் கஸ்ஸப்ப தேரரும் ஏனையவர்களும் பொலிஸாரை தள்ளிக்கொண்டு முன்னோக்கி நகரமுயன்றனர்.அவ்வேளை தேரர்கால்தடுக்கி கொங்கிறீட் கல் ஒன்றின் மீது அவர் விழுந்தார்.
அதன் பின்னர் அவர் தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது போன்று பொலிஸார் அவர் மீது தாக்குதலை மேற்கொள்ளவில்லை.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Yoshitha-new
யோசிதவின் வெளிநாட்டு பயிற்சி – நிதியை ஒதுக்குமாறு கடற்படைக்கு அழுத்தம் கொடுத்தது யார்?
ANURA10
துப்பாக்கிகளுடன் கைதான நபர் – ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன?
anura may 26
நீதிமன்ற தீர்ப்புகளில் ஜனாதிபதி தலையிடுவார் என எதிர்பார்க்கவேண்டாம் - பதுளையில் அனுர
kumar kuna
அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட புதிய சுயாட்சி பிரதேசங்கள் மற்றும் சுயாட்சி அலகுகள் -முன்னிலை சோசலிஷ கட்சியின் தேசிய இனப்பிரச்சினைக்கான இடைக்கால தீர்வுதிட்டம் - யாழ்ப்பாணத்தில் குமார் குணரட்ணம்
Sajith-farmers
விகாரமகாதேவி பூங்காவில் பொலிஸார் பௌத்தமதகுருமார் மீது தாக்குதல்- சஜித்
FB_IMG_1792239658167
கவந்திஸ்ஸ யானை உயிரிழந்த விவகாரம் - சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணைக்கு சஜித் அழைப்பு
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? மருத்துவமனையில்
WEB (15)-859324
நாட்டை சீரழித்தவர்கள் தற்போது இடம்பெறும் நீதிமன்ற நடவடிக்கைளை தடம்புரளச்செய்ய முயல்கின்றனர் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
855385885_1101243299159459_1638274519039026305_n
யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் கூட்டம்: குடிநீர், வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆராய்வு – துரித நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தல்!
suresh11
ஊடகவியலாளர் பிரகீத் காணாமலாக்கப்பட்ட விவகாரம்- சுரேஸ் சாலே நீதிமன்றத்தில் தெரிவித்தது என்ன?