நீதிமன்ற தீர்ப்புகளில் ஜனாதிபதி தலையிடுவார் என எதிர்பார்க்கவேண்டாம் – பதுளையில் அனுர

ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது அரசாங்கம் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் நீதித்துறை செயற்பாடுகளில் தலையிடாது என குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற கட்சியின் மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது
அரசாங்கம் நீதித்துறையின் தீர்ப்பினை மதிக்கும்,நீதித்துறை தீர்ப்பை ஜனாதிபதி மாற்றியமைப்பார் என எவரும் எதிர்பார்க்க கூடாது.
சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றம் அதேவேளை பொலிஸார் குற்றப்புலனாய்வு திணைக்களம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்றவை விசாரணை செய்து சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பு.
ஆனால் சட்டத்தை சரியாக அர்த்தப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு நீதித்துறையிடம் உள்ளது குறிப்பாக உயர்நீதிமன்றத்திடம்.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் சிலர் கூச்சலிட ஆரம்பிக்கின்றனர் அந்த சட்டங்களை அகற்றவேண்டும் என்கின்றனர்.நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்படுவோம் எவரும் எங்களிடமிருந்து தீர்மானங்களை எதிர்பார்க்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Yoshitha-new
யோசிதவின் வெளிநாட்டு பயிற்சி – நிதியை ஒதுக்குமாறு கடற்படைக்கு அழுத்தம் கொடுத்தது யார்?
ANURA10
துப்பாக்கிகளுடன் கைதான நபர் – ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன?
kumar kuna
அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட புதிய சுயாட்சி பிரதேசங்கள் மற்றும் சுயாட்சி அலகுகள் -முன்னிலை சோசலிஷ கட்சியின் தேசிய இனப்பிரச்சினைக்கான இடைக்கால தீர்வுதிட்டம் - யாழ்ப்பாணத்தில் குமார் குணரட்ணம்
kassapa
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? பொலிஸார் தெரிவிப்பது என்ன?
Sajith-farmers
விகாரமகாதேவி பூங்காவில் பொலிஸார் பௌத்தமதகுருமார் மீது தாக்குதல்- சஜித்
FB_IMG_1792239658167
கவந்திஸ்ஸ யானை உயிரிழந்த விவகாரம் - சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணைக்கு சஜித் அழைப்பு
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? மருத்துவமனையில்
WEB (15)-859324
நாட்டை சீரழித்தவர்கள் தற்போது இடம்பெறும் நீதிமன்ற நடவடிக்கைளை தடம்புரளச்செய்ய முயல்கின்றனர் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
855385885_1101243299159459_1638274519039026305_n
யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் கூட்டம்: குடிநீர், வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆராய்வு – துரித நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தல்!
suresh11
ஊடகவியலாளர் பிரகீத் காணாமலாக்கப்பட்ட விவகாரம்- சுரேஸ் சாலே நீதிமன்றத்தில் தெரிவித்தது என்ன?