பச்சை குத்துதலும் நீளமான தலைமுடியும் உங்களை சிறையில் தள்ளமுடியும்- புதிய சட்ட மூலம் குறித்து சாலியபீரிஸ் எச்சரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலம் குறித்து கடும் கரிசனை வெளியிட்டுள்ளதுடன்,பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களை இது பலவீனப்படுத்தக்கூடும், என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்;டமூலம் தன்னிச்சையான கைதுகள் தடுத்துவைத்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்ககூடும் என தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
சர்வதேச சமூகத்திற்கு மனித உரிமைகள் குறித்து உறுதியளித்துக்கொண்டே அரசாங்கம் தனிச்சட்டங்கள்,அதுபோன்ற சர்ச்சைக்குரிய சரத்துக்களை அறிமுகப்படுத்த முயல்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைப்பதற்காக அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என வாக்குறுதியளித்து வந்தன.
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக ஏற்பதை நீக்கும்,இருப்பினும் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஒருங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதற்கு மேற்பட்ட தரத்தையுடைய பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கின்றது.
இதன் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சித்திரவதைகள் துன்புறுத்தலுக்கு வழிவகுத்த சரத்துக்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஒரு நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுவை சேர்ந்தவரா என்பதை தீர்மானிக்கும் போது நபரின் தலைமுடி ஆடைகள் பச்சை குத்துதல் போன்றவற்றையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் சரத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தில் காணப்படுகின்றது என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

france4
பிரான்ஸ் ஒரு கொந்தளிப்பான வார இறுதிக்குப் பிறகு உள்நோக்கிப் பார்க்கிறது: ஒரு சுருக்கம்
kavantissa
கவந்திஸ மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் பெரமுன உறுப்பினர்- அரச ஊடகங்கள்
arrest1
நாமல்ராஜபக்சவின்செயலாளர் சஞ்சய அமரசிங்க கைது
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? உலப்பன தேரரிடம் வாக்குமூலம் பதிவு
CHEMMANY 16
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: மரண தண்டனைக் கைதி சோமரத்னவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!
srisena
ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலையேற்பட்டமைக்காக பௌத்த மதகுருமாரிடம் மன்னிப்பு கோரினார் சிறிசேன- தனது ஆட்சிக்காலத்தில் நடந்த தவறு குறித்தும் சுட்டிக்காட்டினார்-
douglas office
டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை: பல மணி நேரம் சல்லடை போட்ட சி.ஐ.டி!
NATO ARMY
நாம் அறியாமலேயே மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா?
france violence
பலவீனமான பொறி—பிரான்ஸ் முழுவதிலும் நிலவும் ஆத்திரத்தைப் புரிந்துகொள்ளுதல்
856220159_1111142888306600_78763216065081507_n
போரால் அனைத்தையும் இழந்த மக்களுக்கு 17 ஆண்டுகளாகத் தொடரும் உதவிப் பணி – ஆளுநர் பாராட்டு