யாழ்ப்பாணத்தில் படுகொலை தமிழ் ஈழத்திற்கு எதிரான ராஜீவ்காந்தியின் அழுக்கு நிறைந்த போர் என்ற கட்டுரையில் யாழ்மருத்துவமனை படுகொலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள பகுதி(1988 march-_)
https://www.wsws.org/
Mass Murder in Jaffna
Rajiv Gandhi’s Dirty War Against Tamil Eelam
ஓக்டோபர் 21ம் திகதி யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நிகழ்ந்தது இதுதான்.
இந்திய இராணுவத்தின் விசேட படைப்பிரிவான பிளக்கட்டின் படைப்பிரிவொன்று யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குள் புகுந்து கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டது.
பலநோயாளிகள் அவர்கள் படுத்திருந்த கட்டில்களிலேயே கொல்லப்பட்டனர் , பல மருத்துவர்கள் ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.
தங்கள் சீருடையால் இலகுவாக அடையாளம் காணப்படக்கூடியவர்களாகயிருந்த அந்த விசேட படைப்பிரிவினர் மருத்துவமனையில் இருந்த 64 பேரையும் எக்ஸ்-ரே அறைக்குள் செல்லுமாறு மிரட்டினார்கள்,அதன் பின்னர் கைக்குண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர் பின்னர் துப்பாக்கி பிரயோகத்திலும் ஈடுபட்டனர்.மூன்று மருத்துவர்கள்,ஆறுமருத்துவ தாதிமார் ஒரு தலைமை மருத்துவதாதி உட்பட பலர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களுக்குள் மறைந்திருந்தவர்கள் மாத்திரமே உயிர் தப்பமுடிந்தது.
இந்த வெறியாட்டத்தை நேரில் பார்த்தவர் சிவகுருநாதன் – உயிர்தப்பிய சிலரில் ஒருவர் அவர் தான் நேரில் பார்த்ததை தொழிலாளர் பார்வை நிருபரிடம் இவ்வாறு தெரிவித்தார்.
“அன்று எனது மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த 8வது வோர்ட்டில் நான் இருந்தேன்,இந்திய அமைதிப்படையினர் மருத்துவமனையின் பின்புறத்திலிருந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபடி உள்ளேநுழைந்தனர்.
சிலஊழியர்கள் எக்ஸ்- ரே அறையை நோக்கி ஓடினார்கள் நானும் எனது மனைவியும் அவர்களை பின்தொடர்ந்து அங்கு சென்றோம்,எக்ஸ்-ரே அறைக்குள் முதலில் சென்றவர்களில் நானும் ஒருவன் , பின்னர் ஏனையவர்களும் வந்தார்கள்,அறைநிரம்பிவிட்டது நாங்கள் சுவரோடு சுவராக மிகவும் இருந்தோம்,
பின்னர் தாக்குதலை மேற்கொண்டவர்கள் ஒரு குழுவினரை விரட்டிக்கொண்டு எக்ஸ்- ரே அறைக்குள் நுழைந்தனர்,அனைவரையும் உள்ளே தள்ளியவர்கள் கைக்குண்டுகளை வீசினார்கள்,துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்கள்,அங்கிருந்தவர்கள் அலறிக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.

துப்பாக்கி சூட்டு சத்தங்கள் அந்த இடத்தையே உலுக்கினன,அதைத்தொடர்ந்து இயந்திரதுப்பாக்கிகளின் சத்தம்கேட்டது,காலில் ஒரு கடுமையான வலியை நான் உணர்ந்தேன் , நான் கீழே விழுந்தேன்,மற்றவர்கள் என்மீது விழுந்துகொண்டிருந்தனர்.சிறிது நேரத்தில் எலலாம் அமைதியானது,
எனக்கு அருகில் கிடந்த மனைவியை பார்க்க தவழ்ந்து சென்றேன்,நான் அவளை தூக்கியபோது அவள் வலியால் முனகிக்கொண்டே கீழே விழுந்தாள்.நான் அங்கிருந்து தவழ்ந்து சென்று உயிரை பிடித்துக்கொண்டு வெளியேறி நல்லூர் சென்றேன், நான் எனது மனைவியை பார்ப்பதற்காகவே அன்று மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.
ஒக்டோபர் பத்தாம் திகதி உரும்பிராயில் இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் எனது மனைவி காயமடைந்தார்,இந்திய இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் இருந்து தப்ப முயன்றவேளை நான் எனது ஐந்து பிள்ளைகளையும் இழந்தேன்,நாங்கள் வீதியை கடக்க முயன்றவேளை அவர்கள் கொல்லப்பட்டனர், ஆறு பேர் கொல்லப்பட்டனர். எனது மூத்த மகளுக்கு 15 வயது .
இந்த சம்பவத்தின் பின்னர் இந்திய இராணுவத்தினர் மருத்துவமனை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக அறிவித்தனர்.
படுகொலை இடம்பெற்றவேளை மருத்துவமனையில் பணியில் இருக்காத மருத்துவர் குழந்தைகள் நல நிபுணர் மருத்துவர் சிவபாதசுந்தரம் மருநாள் காலை மிகவும் மனவேதனையுடன் மருத்துவமனைக்கு சென்றார்,அங்கு நடந்துசென்றுகொண்டிருந்தவேளை அவரையும் சுட்டுக்கொன்றனர்.’;;’என சிவகுருநாதன் தெரிவித்தார்.
இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் முக்கிய இலக்காக மருத்துவமனைகள் காணப்பட்டன,தமிழர் தேசததின் முதுகெலும்பை முறிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாக அவர்கள் அதனை கருதினார்கள்.
தெல்லிப்பளை மானிப்பாய் இணுவில் மூளாய் மருத்துவமனைகளும் இலக்குவைக்கப்பட்டன,சில பணியாளர்கள் கொல்லப்பட்டனர் அவை தங்கள் சேவைகளை கைவிடப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.