சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரியை ஏன் விசாரிக்கவில்லை?சாணக்கியன்

சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரியிடம் ஏன் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை? என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

சத்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்தப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இந்தப் படுகொலை தொடர்பில் கடந்த ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரி தொடர்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை நான் பாராளுமன்றத்தில் எழுப்பியுள்ளேன்.
1990 செப்டெம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான் பகுதியில் 186 பேர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த குழந்தை வடிவேல் என்பவர் 2025 செப்டெம்பர் 27ஆம் திகதி கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தப் படுகொலையின் பின்னணியில் வர்ண குலசூரிய என்ற இராணுவ அதிகாரி இருப்பதாகக் குழந்தை வடிவேல் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில்இ முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரியிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக முறைப்பாடு செய்த நபரிடம் விசாரணைகள் நடத்தப்படுவது தொடர்பில் நான் கேள்வி எழுப்பியுள்ளேன்.
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ண குலசூரியவிடம் இதுவரை ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? அவரை விசாரணைக்கு அழைக்காததற்கான காரணம் என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எப்போது முன்னெடுக்கப்படும்?
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் அசாத் மௌலானா என்பவர் செனல் 4 தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் அடிப்படையில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அவ்வாறிருக்கையில் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில் ஏன் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சத்துருக்கொண்டான் படுகொலை குமுதினிப் படகு படுகொலை வந்தாறுமூலைப் படுகொலை எனப் பல சம்பவங்களைக் குறிப்பிட முடியும். ஆனால் இவ்வாறான படுகொலைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்தவொரு அரசாங்கமும் நீதியைப் பெற்றுக்கொடுக்கவில்லை.
எனவே கடந்தகாலப் படுகொலைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் சர்வதேச மட்டத்திலான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் அரசாங்கம் வழங்கிய பதில் என்ன? சத்துருக்கொண்டான் படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் நான் முன்வைத்த கேள்விக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்துள்ளார். அமைச்சர் வழங்கிய பதிலின்படி 1990 செப்டெம்பர் 9ஆம் திகதி கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் 186 பேர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகக் குழந்தை வடிவேல் என்பவர் 2025 செப்டெம்பர் 27ஆம் திகதி கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை கிழக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் 2025 நவம்பர் 21ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் 2025 டிசெம்பர் 6ஆம் திகதி இந்த முறைப்பாடு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரிடம் வாக்குமூலம் பெறுவதற்குப் பொலிஸார் பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் முன்னிலையாகவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாட்டாளரைத் தேடிச் சென்று இரண்டு தடவைகள் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும்இ அதன் அடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால்இ இந்தப் பதிலில் முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்துத் தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை. 1979 முதல் 2009 வரை இடம்பெற்ற குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள்
1979 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் துல்லியமான தரவுகள் கிடைக்கப்பெறாத நிலையில்இ தற்போது நாடளாவிய ரீதியில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்த தகவல்களின்படி:
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
1979 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 148 காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 95 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 34 சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 19 சம்பவங்களின் விசாரணைகள் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
மனிதப் படுகொலைச் சம்பவங்கள்
குறித்த காலப்பகுதியில் நாட்டில் 1104 மனிதப் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றில் 541 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 94 சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 469 சம்பவங்களின் விசாரணைகள் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
கூட்டுப் படுகொலைச் சம்பவங்கள்
குறித்த காலப்பகுதியில் 413 கூட்டுப் படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 397 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 13 சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்இ மூன்று சம்பவங்களின் விசாரணைகள் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
ஏனைய பாரதூரமான குற்றச்சம்பவங்கள்
ஏனைய பாரதூரமான குற்றங்களாக 139 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 123 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆறு சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்இ 10 சம்பவங்களின் விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பல தசாப்தங்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலை தொடர்கின்றது. படுகொலைகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் கிடைத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடந்தகாலப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சத்துருக்கொண்டான் படுகொலை உட்பட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அனைத்துப் பாரதூரமான படுகொலைகள் தொடர்பிலும் சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

easter bomb
உயிர்த்தஞாயிறுதாக்குதல்-தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து விசாரணைகள்
PUBUDU_J
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தின் கீழ் சட்டவிரோத இரண்டாம் திருமணமும் குற்றம்? முன்னிலை சோசலிஷ கட்சி
gaje ipkf
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இந்தியா இடையூறாகயிருக்ககூடாது -கஜேந்திரன்
Gotabaya Rajapakasa
கோட்டாபயவின் வெளிநாட்டு பயண அனுமதி மனு- நிராகரித்தது நீதிமன்றம்
IPKF Jaffna Hospital1
1987 ஒக்டோபர் 21ம் திகதி யாழ் மருத்துவமனையில் ------------
Ananda-Wijepala
திலீபன் சிலை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?
psta no1
பயங்கரவாத தடைச்சட்டத்தை விட புதிய சட்டமூலம் மிகவும் ஆபத்தானது – நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள்
gnasaraa
காவியுடையிலேயே நாளை ஞானசாரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
Ambika-620x430
நீதியமைச்சர் தெரிவிப்பதற்கு மாறாக ஒரு நபர் ஆடை அணியும் பாணியை வைத்து அவரை கைதுசெய்யலாம் - ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சட்டமூலம் குறித்து அம்பிகா சற்குணநாதன்
gary
செம்மணி மனித புதைகுழி என்பது சர்வதேச நீதியை பொறுப்புக்கூறலை வேண்டி நிற்க்கும் விடயம் - கனடா அமைச்சர் கரி ஆனந்தசங்கரி