செம்மணியில் பெருந்தொற்று அல்லது இயற்கை பேரழிவால் இறந்தவர்களின் உடல்கள் இருந்ததாக ‘ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை

அமந்த பெரேரா

செம்மணி மனிதப் புதைக்குழியில் புதைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட உடல்கள் ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு காரணமாக இருக்கலாம் என்ற கருத்தைச் சேர்த்ததன் மூலம் அந்தப் அகழ்வாராய்ச்சி முயற்சியின் அதிகாரப்பூர்வ முகமாகச் செயல்பட்ட பேராசிரியர் ராஜா சோமதேவா அந்த மனிதப் புதைக்குழியின் வரலாற்றைப் பற்றிய விவரிப்பில் மீளமுடியாத ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளார்.

1998 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கையின் கொடூரமான மோதல் வரலாற்றின் ஒரு பகுதியாகச் செம்மணி இருந்து வருகிறது. அதன் துயரம் நிறைந்த கடந்த காலம் அதற்கும் அப்பாற்பட்டது. அது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முந்தையது. அங்கிருந்த உடல்கள் தொடர்பான விசாரணைகள் யார் ஆட்சியில் இருந்தார்கள் மற்றும் அவர்களின் சர்வதேசப் பொது நிலைப்பாடுகள் என்ன என்பதைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளன. ஜூன் 1999-ல் முன்னாள் இராணுவ வீரரும் மற்றும்
பாலியல் வன்கொடுமை வழக்கில்.தண்டனை பெற்ற குற்றவாளியுமான சோமரத்ன ராஜபக்ஷ அங்கு அழைத்து வரப்பட்டபோதே இதெல்லாம் தொடங்கியது. ஆனால் அதற்குப் பிந்தைய 28 ஆண்டுகளில் அந்த உடல்கள் அல்லது அவற்றில் சிலவேனும் ஒரு சுகாதாரப் பிரச்சனையாலோ அல்லது இயற்கை பேரழிவாலோ புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு வதந்தியோ ஊகமோ அல்லது கதையோ கூட நாம் கேட்டதில்லை.

வரலாற்றின் இந்தப் பகுதியை நாம் தவறவிட்டுவிட்டோமா என்பதைப் புரிந்துகொள்வதற்காக முதல் கட்ட அகழ்வாராய்ச்சிகள் தொடங்கிய நாளில் அங்கு இருந்த ஒருவருடன் நான் பேசினேன். எனது சக ஊழியரின் பதில் மிகத் தெளிவாக இருந்தது: 1999-ல் செம்மணியில் பெருந்தொற்று அல்லது இயற்கை பேரழிவால் இறந்தவர்களின் உடல்கள் இருந்ததாக ‘ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை’. அந்த இடத்தைச் சுற்றி வாழும் மக்கள் 1990-களின் நடுப்பகுதியில் நள்ளிரவில் அந்த இடத்தில் புல்டோசர்கள் நடமாடியது பற்றியும் அருகில் உள்ள கிணறுகளில் ஆடைத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது பற்றியும் பேசினார்கள். தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு பற்றி யாருமே எதுவும் கூறவில்லை. இந்த உடல்கள் இறுதியில் அத்தகைய ஒரு பேரழிவால் தான் புதைக்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட்டால்இ இதை நாம் அனைவரும் எவ்வாறு தவறவிட்டிருக்க முடியும்?

அரியாலையில் கைது செய்யப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குத் புலனாய்வாளர்களை அழைத்துச் செல்ல முடியும் என்று ராஜபக்ஷ 28 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பிரதான வீதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஒரு தம்பதியரின் இரு உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய இடத்திற்குப் புலனாய்வாளர்களை அழைத்துச் சென்று அதைச் செய்தார். அந்தப் பெண் பாலியல்வன்கொடுமைக்கு பின்னர் இருவரும் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். அந்த இடத்திலிருந்து குறைந்தது ஒரு உடலாவது மீட்கப்பட்டது.

இப்போது சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களைக் கொட்டும் இடமாக இது பயன்படுத்தப்படவில்லை என்பதைச் சமீபத்திய சோமதேவா அறிக்கை உறுதிப்படுத்துவதாக இணையத்தில் விவாதங்கள் வெடித்துள்ளன. மாறாக சுகாதார அவசரநிலை அல்லது பேரழிவு காரணமாக உடல்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடமாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு மாறாகக் கூறியவர்கள் நிபுணர்கள் உட்பட அனைவரும் இப்போது துரோகப் பொய்கூறுபவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இந்தச் செய்தியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலரே உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களின் அறிக்கைகள் அகழ்வாராய்ச்சியின் ஒரு நாட்குறிப்பை மட்டுமே பிரதிபலிப்பதாக அமைந்துவிட்டன. அந்த இடத்தின் வரலாற்றுப் பின்னணி அவர்களுக்குப் போதியளவு இல்லை. செம்மணி மற்றும் பரந்த போர் நிலவரம் குறித்து நிலப்பரப்பிலிருந்து மிக நெருக்கமாகச் செய்தி வெளியிட்ட பெரும்பாலோர் நாட்டின் வெளியில் உள்ளனர் அல்லது இப்போது நம்மிடையே இல்லை.

தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் ஒரு சிலர் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு நடத்தையை எதிர்கொள்கிறார்கள். மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அவற்றின் நிலை மற்றும் அந்த இடத்தின் தெரிந்த வரலாறு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியதால் அவர்கள் பொய்கூறுபவர்கள் என்று துரத்தப்படுகிறார்கள். அது சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளுக்கு இரையானவர்கள் புதைக்கப்பட்ட ஒரு இடம் என்பதுதான் அந்த வரலாறு.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ships iran
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே 21 ஈரானிய கப்பல்கள் -இராஜதந்திர சமநிலையை பேணுவதற்கு சிரமப்படும் இலங்கை
harsha kumara
ஹோமாகம பொலிஸார் ஹர்சகுமாரவை கைதுசெய்தவேளை அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் எங்கே ?வசந்த முதலிகே கேள்வி
sri-lanka-monk-meeting
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருவின் இரகசிய சந்திப்பு – ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
kassapa hotel
நான் ஐந்து நட்சத்திரஹோட்டலுக்கு சென்றது தவறான விடயமா? ஏன் சர்ச்சையை உருவாக்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்
gajendran
அச்சுறுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சி- கஜேந்திரன்
harsha kumara
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு – காயங்களை பார்த்தோம் குருதி வெளியேறிக்கொண்டிருந்தது என குடும்பத்தவர்கள் தெரிவிப்பு
iran ships
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் - உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 பேர் கொழும்பில் சிகிச்சைக்கு பின்னர் ஈரானிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்
malwathu asgri
மகாநாயக்கதேரர்கள் தெரிவித்துள்ளது என்ன?
monks pro2
ஞானசார தேரரின் விடுதலையை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்த தீர்மானம் - பௌத்தமதகுருமார்
harini cnn
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை நாங்கள் எதிர்த்தது உண்மை ஆனால் தொடர்ந்து முன்னெடுப்பதை தவிர வேறுவழியிருக்கவில்லை- சிஎன்என்னிற்கு பிரதமர் ஹரிணி