நான் ஐந்து நட்சத்திரஹோட்டலுக்கு சென்றது தவறான விடயமா? ஏன் சர்ச்சையை உருவாக்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்

பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு தான் சென்றதை நியாயப்படுத்தியுள்ளதுடன் ஞானசாரதேரரின் விடுதலையை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருமாருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது எனது பக்தர்கள் எனக்கு தங்குமிடத்தையும் மருத்துவசதிகளையும் ஏற்பாடு செய்தார்கள்.
நான் கடும் காய்ச்சலால் பாதிக்கப்;பட்டேன் இதனை தொடர்ந்து ஆதரவாளர்கள் நான் ஆர்ப்பாட்டத்தின் போது தங்குவதற்கான இடங்களை ஏற்பாடு செய்தார்கள்.
எனினும் நான் விகாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியிலேயே இருக்க விரும்பியதால் அவற்றை நிராகரித்துவிட்டேன்.
எனது பக்தர்கள் கேட்டுக்கொண்டதால் நான் மருத்துவசிகிச்சை வழங்கப்படும் சில இடங்களுக்கு சென்றேன்.
பௌத்தர்கள் பாரம்பரியமாக பௌத்தமதகுருமாருக்கும் விகாரைகளுக்கும் உணவு தங்குமிடம் வாகனம் நிலம் போன்றவற்றை வழங்கிவந்துள்ளனர்.
சிலர் குடிப்பதற்கு நீரை வழங்குவார்கள், ஏனையவர்கள் உணவு தங்குமிடம் கூடாரங்கள் போன்றவற்றை வழங்குவார்கள்,தங்கள் வீடுகளையும் நிலங்களையும் வழங்க முன்வந்த மக்களும் உள்ளனர்.
பௌத்த பாரம்பரியத்தின்படி பக்தர்கள் தங்கள் முழுசொத்துக்களையும் கூட ஏன் கிராமங்களையும் கூட பௌத்தஆலயங்களுக்கும் மதகுருமாருக்கும் எழுதிவைத்துள்ள வரலாறு உள்ள நிலையில் நான் ஹோட்டலுக்கு சென்றதை ஏன் சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றுகின்றனர்.
பௌத்தமதகுருமாருக்கு உதவிகளை வழங்குபவர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை பகிரங்கப்படுத்துவது கவலையளிக்கின்றது.இது ஒரு பாரதூரமான விடயம் இதனால் சர்வதேச ஹோட்டல்கள் குறித்த பொதுமக்களின் நம்பிக்கைகள் பாதிக்கப்படலாம்.தனிப்பட்ட தகவல்களை பகிரங்கப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றோம் என கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளா

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

basil
மாத்தறை பிரவுண்ஹில் காணி வழக்கு – பசிலுக்கு பிடியாணை
BASL-asks-govt
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ்கொள்வனவு : நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
Ananda-Wijepala
பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்த முடியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ranil 1
விவாகாரத்து விவகாரம் - 29 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது எனநீதிமன்றம் தெரிவிப்பு
patrick brown1111
பிராம்ப்டனில் மூன்றாவது முறையாக மேயர் பதவியைக் கைப்பற்றினார் பேட்ரிக் பிரவுன்
ambika-satkunanathan
இலங்கையில் பொலிஸாரின் துஸ்பிரயோகங்களுக்கு நீண்டவரலாறு உள்ளபோதிலும் அரசாங்கம் அவர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்க முயல்கின்றது – அம்பிகா சற்குணநாதன்
anojan
அனோஜனை சந்தித்தார் இலங்கை தூதுவர்
trump
டிரம்பின் உத்தரவு கிடைத்தால் ஈரான் மீது உக்கிரமான பெரும் தாக்குதல்நடத்த அமெரிக்கா திட்டம்
rajkumar rajeev
இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமார் எங்கே? இலங்கை அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்!-ரஜீவ்காந்