சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை நாங்கள் எதிர்த்தது உண்மை ஆனால் தொடர்ந்து முன்னெடுப்பதை தவிர வேறுவழியிருக்கவில்லை- சிஎன்என்னிற்கு பிரதமர் ஹரிணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்ததை நியாயப்படுத்தியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய அரசாங்கம் பதவியேற்றவேளை சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை தவிர வேறுவழிஎதுவும் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சிஎன்என்னிற்கு வழங்கிய பேட்டியில் தனது கட்சி கடந்த காலங்களில் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை விமர்சித்தது எதிர்த்தது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்தின் கடந்தால அனுபவங்களே அதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை தொடர தீர்மானித்தமை குறித்த கேள்விக்கு எங்களுக்கு அதனை தொடர்வதை தவிரவேறு வழியிருக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்துடான எங்களின் கடந்தகால அனுபவங்கள் சிறப்பாகயில்லை என்பதால் நாங்கள் அதனுடனான திட்டத்தை விரும்பவில்லை சர்வதேசநாணயநிதியத்தின் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல்தடவையல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவேளை ஏற்கனவே சர்வதேச நாணயநிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது,நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தோம் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமானவிடயமல்ல என்பதை நாங்கள் உணர்ந்தோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேசநாணயநிதியத்தின் பல முன்னுரிமைகளும் எங்கள் அரசாங்கத்தின் நோக்கங்களும் ஒரேமாதிரியானதாக காணப்பட்டதால் அதன் திட்டத்தை தொடரமுன்னெடுத்தோம் என ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரதன்மையை உறுதி செய்வதே புதிய அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்பட்டது,நாங்கள் எங்களால் நிர்வாகம் செய்ய முடியும் ஆட்சி செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவேண்டிய நிலையிலிருந்தோம் பலர் நாங்கள் தோல்வியடைவதற்காக காத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
2022 பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் நாங்கள் எதிர்கொண்ட விடயங்களை கருத்தில் கொள்ளும் போது குறிப்பிடத்தக்க அளவிற்கு சிறப்பாக செயற்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ranil 1
விவாகாரத்து விவகாரம் - 29 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது எனநீதிமன்றம் தெரிவிப்பு
ships iran
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே 21 ஈரானிய கப்பல்கள் -இராஜதந்திர சமநிலையை பேணுவதற்கு சிரமப்படும் இலங்கை
harsha kumara
ஹோமாகம பொலிஸார் ஹர்சகுமாரவை கைதுசெய்தவேளை அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் எங்கே ?வசந்த முதலிகே கேள்வி
sri-lanka-monk-meeting
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருவின் இரகசிய சந்திப்பு – ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
kassapa hotel
நான் ஐந்து நட்சத்திரஹோட்டலுக்கு சென்றது தவறான விடயமா? ஏன் சர்ச்சையை உருவாக்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்
chemmani11111155555555555
செம்மணியில் பெருந்தொற்று அல்லது இயற்கை பேரழிவால் இறந்தவர்களின் உடல்கள் இருந்ததாக 'ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை
gajendran
அச்சுறுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சி- கஜேந்திரன்
harsha kumara
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு – காயங்களை பார்த்தோம் குருதி வெளியேறிக்கொண்டிருந்தது என குடும்பத்தவர்கள் தெரிவிப்பு
iran ships
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் - உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 பேர் கொழும்பில் சிகிச்சைக்கு பின்னர் ஈரானிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்
malwathu asgri
மகாநாயக்கதேரர்கள் தெரிவித்துள்ளது என்ன?