ஹோமாகம பொலிஸார் ஹர்சகுமாரவை கைதுசெய்தவேளை அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மற்றுமொரு நபருக்கு என்ன நடந்தது என சிவில் சமூக செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார்
சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது
ஹர்ச குமார பொலிஸ்நிலையத்திற்குள் மோசமாக தாக்கபட்டார்,அவரது உறவினர்கள் மருத்துவசிகிச்சையை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த போதிலும் பொலிஸார் வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார்கள்.
விசாரரணககு பின்னர் நடக்க முடியாத நிலையிலிருந்த அவரை பொலிஸார் தூக்கி சென்றார்கள் , காயங்கள் வெளிப்படையாக தெரிந்தன, குருதி வழிந்தது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹர்ச குமாரவி;ன் உறவினர்கள் தாங்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்த பின்னரே அவரை பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என குறிப்பிட்டனா.
குமாரவை பொலிஸார் கைதுசெய்தவேளை அவருடன் மோட்டார் சைக்கிளில் இருந்ததாக கூறப்படும் மற்றுமொரு இளைஞர் எங்கே? பொலிஸார் இதுவரை அவர் எங்கே என்பதை தெரிவிக்கவில்லை என வசந்த முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார்
எனினும் ஹர்சகுமாரவுடன் பயணித்த மற்றுமொரு நபர் காணாமலாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுவதை பொலிஸ் பேச்சாளர் நிராகரித்துள்ளதுடன இந்த குற்றச்சாட்டு பொய் என குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் தாங்கள் கைதுசெய்யும் எவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சட்டவிரோதமான விதத்தில் செயற்பட்ட பொலிஸார் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தள்ளார்.