ஜீவனாம்ச தொகையை செலுத்ததவறியமைக்காக 29 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நபருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என அறிவித்துள்ள உயர் நீதிமன்றம் அதனை இரத்து செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2024ம் ஆண்டு பொதுமன்னிப்பின் கீழ் முகமது அமீன் முகமது நசீம் என்பவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு தண்டனை தளர்வு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை மற்றும் சட்டத்தின் முன் சமனான பாதுகாப்பு ஆகியவற்றை மீறியுள்ளது என மூவரடங்கிய நீதிபதிகள் குழு 23ம் திகதி தீர்ப்பளித்துள்ளது.
நீதியரசர் ஜனிக் டி சில்வாவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.ஏனைய நீதியரசர்கள் இதற்கு உடன்பட்டனர்.
நசீமின் முன்னாள் மனைவியான அகமது ஜமீல் பர்மிலா பேகம் என்பவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . நசீம் தனது 29 மாத சிறைத்தண்டனையில் இரண்டு மாதங்களுக்கும் குறைவாக கழிந்திருந்த நிலையில் அவரது விடுதலையை எதிர்த்து இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
ஜீவானாம்ச தொகையை செலுத்த தவறியதை தொடர்ந்து நசீம் 2024ம்; ஆண்டு சிறையி;ல் அடைக்கப்பட்டார்.எனினும் சிறைவாசிகள் தினத்தை குறிக்கும் வகையில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் 2024 செப்டம்பர் விடுதலை செய்யப்பட்டார்.