முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை எதிர்வரும் 4ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கான அனுமதியை கோரி முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வேண்டுகோளை ஆரய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதவான் பசன் அமரசசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் முன்னர் செய்யப்பட்ட சத்திரசிகிச்சையை தொடர்ந்து சிங்கப்பூரில் முன்னாள் ஜனாதிபதிக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக அவரது நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.