பொலிஸ் காவலில் நபரொருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை நாளை (29) ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) அழைப்பு விடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த உத்தியோகத்தர்கள் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும் சட்டத்தரணியுமான நிமால் ஜி. புஞ்சிகேவா தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.