தும்பறை சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக ஏறி தப்பியோடுவதற்கு குறித்த கைதி முயன்றபோது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்தவர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக 10 நாட்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கெலகெதர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.