அமைச்சர் லால்காந்தவின் நேரடி வழிகாட்டலில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனையில் தமிழ் பண்ணையாளர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தாவது


சிங்களபௌத்த அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
யுத்தகாலத்தில் நேரடியாக பொருளாதாரத்தை அழித்து பொதுமக்களை கொலை செய்து இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த சிங்கள பௌத்தபேரினவாத ஆட்சியாளர்கள் எங்களுடைய நிலங்களை தங்களுடைய அரச திணைக்களங்கள் ஊடாக கபளீகரம் செய்து எங்களது மக்களை அங்கிருந்து வெளியேற்றி சிங்களபௌத்தமயமாக்கும் செயற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து இந்த இடங்களை முழுமையாக சிங்கள பௌத்தபகுதியாக மாற்றுவதற்கான வேலை திட்டம் கடந்த 2013 ம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2015 இல் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவினால் மாதுருஓயா வலதுகரை திட்டம் என்பது ஆரம்பிக்கப்பட்டு அந்த திட்டத்தின் ஊடாக வருகின்ற நன்மைகளை வயல் நிலங்கள் அபிவிருத்தி சார்ந்த விடயங்களை பெரும்பான்மை இனச்சிங்களவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காக அங்கே பல நூற்றாண்டுகளாக கால்நடைகளை வைத்து மேய்த்து வந்த தமிழர்களை வெளியேற்றி விட்டு இந்த மாவட்டத்திற்கு சம்பந்தமில்லாத வெளிமாவட்ட சிங்களவர்களை கொண்டுவந்து பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்துவது என்ற போர்வையில் நீண்டகாலத்திற்கு அந்த மாதுரு ஓயா திட்டத்தின் நன்மைகளை சிங்களவர்களுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதற்காக பத்தாயிரம் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் நிலங்களை கைப்பற்றிஅவர்களுடைய குளங்களை அழித்து கால்நடைகளை கொன்று மிகப்பெரிய அட்டுழியங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
அனுரகுமார பதவியேற்பதற்கு முன்னர் மேடைமேடையாக சொன்னார் கடந்தகால அரசாங்கங்களின் இனவாத செயற்பாடுகள் தான் தமிழர்கள் இனவாத தலைவர்களுக்கு பின்னால் செல்லவேண்டிய நிலையேற்பட்டது,நான் இனவாதம் மதவாதத்திற்கு இடமளிக்க மாட்டேன் அனைவரையும் சமமாக நடத்துவேன் என தெரிவித்து பதவிக்கு வந்தவர் அவர்.
இன்று அவருடைய தலைமையிலே லால்காந்தவின் நேரடியான நெறிப்படுத்தலியேமகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் உதவியோடு காவல்துறையின் உதவியோடு வனஜீவராசிகள் வனபாதுகாப்பு திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்போடு
தொல்பொருள் திணைக்களத்தின் உதவியோடும் எங்கள் பண்ணையாளர்கள் தொடர்ந்து விரட்டப்படுவதும் அவர்களது கால்நடைகள் அழிக்கப்படுவதும் அவர்களின் நிலங்கள் அழிக்கப்படுவதும் அவர்களது நிலங்கள் அரசதிணைக்களங்களுக்கு சொந்தமான உழவு இயந்திரங்களால் அழிக்கப்படுவதும் எங்களது பண்ணையாளர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதும் அந்த சித்திரவதைகளில் ஈடுபடுகின்ற காடையர்கள் சிறிலாங்கா காவல்துறையினரால் பாதுகாக்கப்படுவதும் இடம்பெறுகின்றது.
இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கடந்தகாலங்களில் நாங்கள் பண்ணையாளர்களுடன் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம் ஆனால் இந்த ஒடுக்குமுறைகள் நின்றபாடில்லை.
இந்த இடத்திலே நாங்கள் சர்வதேச சமூகத்திடம் ஒன்றை கேட்கின்றோம் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கின்றோம் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க கூடாது உங்களின் உதவிகள் என்பதை வெறுமனே சிங்கள பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாத்திமரம் வழங்குகின்றீர்களா?
இனவாதத்தின் அடிப்படையில் தமிழ்மக்களை அழித்து அவர்களது பொருளாதாரத்தை அழித்து சிங்கள பெரும்பான்மை தனது பொருளாதாரத்தை கொண்டு செல்லக்கூடிய உதவிகளாக உங்கள் உதவிகள் அமைகின்றன வழங்கப்படுவதும் இடம்பெறுகின்றது.