வனஇலாகா சட்டவிரோத காடழிப்புக்களை கட்டுப்படுத்த தவறுவதாகவும், அதிகாரிகள் தவறிழைப்பதாகவும் – ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; ஆராய்ந்துபார்த்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி பதில்

ஆவணங்கள் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக மக்களின் பூர்வீக வாழ்விடக்காணிகளையும், விவசாய நிலங்களையும் துப்புரவாக்கத் தடைபோடும் வனவளத்திணைக்களம், மறுபுறம் சட்டவிரோத காடழிப்புகளைக் கட்டுப்படுத்த தவறுவதோடு அவற்றுக்குரிய திணைக்களரீதியான பொறுப்புக்கூறல்களையும் வெளிப்படுத்துவதில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும், சில உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுற்றாடல் அமைச்சரிடம் குற்றச்சாட்டொன்றையும் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்தொடர்பில் தம்மால் ஆராய்ந்துபார்த்து நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி பதிலளித்துள்ளார்.
பாராளுமன்றில் 03.11.2026இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு அடங்கிய வன்னி மாவட்டத்தில் ஒருபுறம் வன ஒதுக்குப்பகுதிகளில் இருந்து காடுகள் அழிக்கப்படுகின்றன.
பொதுமக்களிடம் இருந்து ஆவணங்களைக் கோரும் வனவளத் திணைக்களம், சட்டவிரோத காடழிப்புகளிலும் படையினரின் சட்டவிரோத நிருமாணங்களிலும் அமைதி காக்கிறது.
ஆவணம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக மாமரமும் வேம்பும் வீட்டு அத்திவாரமும் தெரியும் படியாக உள்ள காணிகளைக்கூட துப்புரவாக்கத் தடைபோடும் வனவளத்திணைக்களம், படையினரின், அத்துமீறிய செயற்பாட்டாளர்களின் காடழிப்புகளுக்கு ஏன் மௌனம் காக்கின்றது.
ஒருபுறம் காடுகளைப் பாதுகாக்கவேண்டும் என செயற்றிட்டங்களை இந்த அரசு முன்னெடுக்கின்றது. ஆனால் மறுபுறம் சட்டவிரோத காடழிப்புகளையும் கட்டுப்படுத்த தவறுவதோடு அவற்றுக்கான திணைக்கள பொறுப்புக்கூறலையும் உரியவாறு முன்னிறுத்தவில்லை.
நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவில் அழிக்கப்படும் காடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மக்கள் எங்களுக்கு முறைப்பட்டு நாங்கள் அங்கு சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தி வனவளத்திணைக்களத்திடம் சொல்லும் வரையில் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திரிவச்சகுளம் பகுதியில் நடைபெற்ற காடழிப்பு, வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடைபெற்ற காடழிப்புகளில் மக்கள் நேரடியாக வனவளத்திணைக்கள அதிகாரிகளையுமே சாடுகின்றனர்.
எனவே, இவ்வாறு தமது எல்லைப்பரப்புகளில் சட்டவிரோத மரம் வெட்டுதல், நிருமாணங்களை மேற்கொள்ளல், காடழிப்புகள் நடைபெறுவதை கண்காணிக்கத்தவறுதல் என்பவை மீள நிகழாதிருக்கும் வகையில் வனவளத்திணைக்கள பொறுப்புக்கூறலை மேலும் வலுப்படுத்த தங்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்குமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி இதன்போது பதிலளிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ள சட்டவிரோத காடழிப்புக்கள் தொடர்பாக எம்மால் ஆராய்ந்து பார்க்கப்படும்.
வனப்பாதுகாப்புப் பகுதியில் காணப்படுகின்ற காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கோ, வன அழிப்பிற்கோ நாம் அனுமதி வழங்குவதில்லை.
இருப்பினும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால், வனப்பயிரிடப்படுகின்ற காணிகளிலுள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. அவ்வாறு வெட்டப்படுகின்ற மரங்கள் மரக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படுகின்றன.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இங்கு குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக நான் ஆராய்ந்துபார்க்கின்றேன். தேவைமான நடவடிக்கைகளேயும் நான் மேற்கொள்கின்றேன் – என்றார்.
இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பாக தாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டுமென தொடர்ந்தும் அமைச்சரிடம் வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும், சில உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் எனவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

aacdb9d0-d70a-11f1-81b9-c76bd127a61a
டிரம்பின் எஞ்சிய ஆட்சிக் காலத்தை தீர்மானிக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
846375662_1429388159407679_5413946223460394141_n
நாளை நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற மைதானத்திற்கு வாருங்கள். இந்த நாட்டின் நீதிக்காக நிற்போம்
Namal-750x422
கிரிஷ் பணபரிமாற்ற வழக்கில் நாமலுக்கு பிணை – எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில்
buddha in jaffna
கந்தரோடையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது
Yoshitha-new
பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் யோஷித
Sajith-Premadasa-2 (1)
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - அவையில் குழப்பநிலை
iran ships
ஈரானிய கப்பல் பணியாளர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பிய விவகாரம் - அமெரிக்க தடைகளை எதிர்கொள்கின்றதா இலங்கை
BLACK JULY
1983 இனக்கலவரம் மீண்டும் அரசியல் களத்தில் பேசுபொருளானது
image_2e32eaf276
வடக்கில் அரசாங்கத்தின் வசமுள்ள நிலங்கள் ஆண்டின் இறுதிக்குள் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்
CPA
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலம் - அரசியலமைப்பிற்கு முரணாண விடயங்களை கொண்டுள்ளதாக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் நீதிமன்றத்தில் மனு