2026 ஒக்டோபர் இரண்டாம் திகதி வர்த்தமானியில் வெளியான பின்னர் நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலத்தின் அரசியலமைப்பிற்கு முரணாண தன்மையை எதிர்த்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலைய உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலம் அல்லது அதன் சரத்துக்களோ இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணாணவையா மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சர்வஜனவாக்கெடுப்பு மூலம் மக்கள் ஒப்புதல் அவசியமா என்பதை தீர்மானிக்கோரி அரசியலமைப்பின் 120 .121 பிரிவுகளின் அடிப்படையில் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
சட்டமூலத்தில், பாரதூரமான குற்றங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்கள் போன்றவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ள வரையறைகள்,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவில் உறுப்பினராக காணப்படும் குற்றம்,வெளியீடுகள் மீதான கட்டுப்பாடுகள், கைதுசெய்வதற்கான அதிகாரம்,நிறைவேற்று அதிகாரத்தின் தடுத்துவைப்பதற்கான உத்தரவு, பிணை , போன்றவை இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணாண விடயங்கள் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.