கந்தரோடையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

யாழ்ப்பாணம், கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் – கந்தரோடை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள வளாகத்தில், கடந்த சனிக்கிழமை தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த குழுவினர் புத்தர் சிலை ஒன்றை நிறுவி, ‘பிரித்’ ஓதி வழிபாடுகளை முன்னெடுத்திருந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் கள நிலவரத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி. பிரகாஷ்:
சனிக்கிழமை இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வுகளுக்காகவே தற்காலிகமாக புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டதாகவும், பூசைகள் நிறைவடைந்த பின்னர் அச் சிலை உடனடியாக அங்கிருந்து மீள எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும் அங்குள்ள தரப்பினர் தவிசாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆராய்ந்த தவிசாளர், பிரதேச சபையின் உரிய அனுமதிகள் இன்றி முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் எதிராக நீதிமன்றம் ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
கந்தரோடை பகுதி தொல்லியல் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன தளமாகும். அப்பகுதியில் உள்ளூர் அதிகார சபைகளின் அனுமதியின்றி புதிய மத அடையாளங்களை அமைப்பதோ அல்லது வழிபாடுகளை முன்னெடுப்பதோ அண்மைக்காலமாக வடபகுதியில் தொடர்ச்சியான சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

aacdb9d0-d70a-11f1-81b9-c76bd127a61a
டிரம்பின் எஞ்சிய ஆட்சிக் காலத்தை தீர்மானிக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
846375662_1429388159407679_5413946223460394141_n
நாளை நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற மைதானத்திற்கு வாருங்கள். இந்த நாட்டின் நீதிக்காக நிற்போம்
Namal-750x422
கிரிஷ் பணபரிமாற்ற வழக்கில் நாமலுக்கு பிணை – எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில்
Yoshitha-new
பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் யோஷித
ravikaran ssssssssssssss
வனஇலாகா சட்டவிரோத காடழிப்புக்களை கட்டுப்படுத்த தவறுவதாகவும், அதிகாரிகள் தவறிழைப்பதாகவும் - ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; ஆராய்ந்துபார்த்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி பதில்
Sajith-Premadasa-2 (1)
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - அவையில் குழப்பநிலை
iran ships
ஈரானிய கப்பல் பணியாளர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பிய விவகாரம் - அமெரிக்க தடைகளை எதிர்கொள்கின்றதா இலங்கை
BLACK JULY
1983 இனக்கலவரம் மீண்டும் அரசியல் களத்தில் பேசுபொருளானது
image_2e32eaf276
வடக்கில் அரசாங்கத்தின் வசமுள்ள நிலங்கள் ஆண்டின் இறுதிக்குள் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்
CPA
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலம் - அரசியலமைப்பிற்கு முரணாண விடயங்களை கொண்டுள்ளதாக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் நீதிமன்றத்தில் மனு