அமெரிக்கப் சனப்பிரதிநிதிகள் சபையின் (House of Representatives) பெரும்பான்மையைக் கைப்பற்றும் பாதையில் ஜனநாயகக் கட்சி உறுதியாக முன்னேறி வருகிறது. அத்துடன் செனட் சபையையும் (Senate) தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், இது ஜனநாயகக் கட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவாக உருவெடுத்துள்ளது.

கன்சாஸ் செனட் இடம் ஜனநாயகக் கட்சிக்குச் செல்ல வாய்ப்பு (CBS)
கன்சாஸ் (Kansas) செனட் தொகுதியில் ஜனநாயகக் கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக CBS News கணித்துள்ளது.
– “இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்கத் தயார்” – டிரம்ப்
குடியரசுக் கட்சியின் வலுவான கோட்டைகளாகக் கருதப்பட்ட பல இடங்களில் ஜனநாயகக் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில்; “அந்த முடிவுகளை முழுமையாக ஏற்க நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்” என்றும், எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐயோவா ஆளுநர் தேர்தலில் ராப் சேண்ட் வெற்றி பெற வாய்ப்பு
ஐயோவா (Iowa) ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ராப் சேண்ட் (Rob Sand) வெற்றி பெற்று அந்த இடத்தைக் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓஹியோ செனட் இடத்தைக் கைப்பற்றுகிறார் ஷெரோட் பிரவுன் (CBS)
ஓஹியோ (Ohio) செனட் தொகுதியில் 87% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், 48.6% வாக்குகளுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஷெரோட் பிரவுன் (Sherrod Brown) முன்னிலையில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் ஆளுநர் இடத்தைக் கைப்பற்றுகிறார் ஜீனா ஹினோஜோசா (CBS)
டெக்சாஸ் (Texas) ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜீனா ஹினோஜோசா (Gina Hinojosa) வெற்றி பெறுவார் என CBS News கணித்துள்ளது. பல தசாப்தங்களாக டெக்சாஸை நீல நிறமாக (ஜனநாயகக் கட்சியின் கோட்டையாக) மாற்ற முயன்ற அந்தப் கட்சியின் முயற்சிக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
09:35 – மேலும் பல மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு
ஒரிகான், கலிபோர்னியா மற்றும் வடக்கு டகோட்டா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அலாஸ்கா மற்றும் ஹவாய் ஆகிய மாநிலங்களில் மட்டுமே வாக்குப்பதிவு இன்னும் நடைபெற்று வருகிறது.
09:27 – தனது கட்சியிடமிருந்து விலகிப் பேசும் டிரம்ப்
குடியரசுக் கட்சியின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில் டிரம்ப் தனது ‘Truth Social’ பக்கத்தில் பதிவிடுகையில்: “இந்தத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் நான் இல்லை. ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால், நாம் பெரும் சாதனை வெற்றியைக் (Landslide Victory) கைப்பற்றியிருப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தேர்தல் தோல்விகளுக்குக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களே காரணம் என அவர் சுட்டிக்காட்டுவது போல் அமைந்துள்ளது.
09:25 – டெக்சாஸ் செனட் இடத்தைக் கைப்பற்றுகிறார் ஜேம்ஸ் தலாரிகோ (CBS)
66% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், 59.6% வாக்குகளுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் தலாரிகோ (James Talarico) குடியரசுக் கட்சி வேட்பாளர் கென் பாக்ஸ்டனைத் தோற்கடித்து டெக்சாஸ் செனட் இடத்தைக் கைப்பற்றுவார் என CBS News கணித்துள்ளது. 38 ஆண்டுகளில் டெக்சாஸில் வெற்றிபெறும் முதல் ஜனநாயகக் கட்சி செனட்டர் இவராவார்.
09:21 – ஓஹியோ மற்றும் பிற செனட் போட்டிகள் நிலவரம்
-
மிசிசிபி (Mississippi): குடியரசுக் கட்சியின் செல்வாக்குமிக்க இந்த மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியின் ஸ்காட் கொலோம் (Scott Colom) கடுமையான போட்டியை அளித்து வருவதால், இந்தத் தேர்தல் முடிவு எந்தப் பக்கமும் சாயலாம் (Toss-up) எனப் பார்க்கப்படுகிறது.
-
கன்சாஸ், மேய்ன், மிச்சிகன்: பல செனட் தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது.
09:11 – ஜனநாயகக் கட்சிக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவு!
அமெரிக்கப் சனப்பிரதிநிதிகள் சபையின் (House of Representatives) பெரும்பான்மையைக் கைப்பற்றும் பாதையில் ஜனநாயகக் கட்சி உறுதியாக முன்னேறி வருகிறது. அத்துடன் செனட் சபையையும் (Senate) தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், இது ஜனநாயகக் கட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவாக உருவெடுத்துள்ளது.