முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது கட்சியின் (ஜனநாயகக் கட்சி) இந்த பிரம்மாண்டமான வெற்றி, அமெரிக்க மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கான சான்று எனக் கூறியுள்ளார்.
இது குறித்து ‘X’ (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள ஒபாமா:
“இன்றிரவு, அமெரிக்க மக்கள் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளனர் — மக்களைப் பிளவுபடுத்துவதற்குப் பதிலாக ஒன்றிணைக்கும் அரசியலையும், தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தெளிவான மற்றும் நடைமுறை சாத்தியமான தீர்வுகளை வழங்கும் தலைவர்களையுமே அவர்கள் விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மிச்சிகன் மற்றும் போன்ற முக்கிய ‘ஸ்விங் ஸ்டேட்’ (Swing States – போட்டி நிறைந்த மாநிலங்களில்) போட்டியில் இருந்த பல ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்காக ஒபாமா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
அவர் மேலும் கூறுகையில்: “நமது தற்போதைய பணி என்னவென்றால், களத்தில் இறங்கி தீவிரமாக உழைப்பது, நமக்கு அதிகாரம் இருக்கும் இடங்களில் மாற்றங்களைச் செய்வது, மேலும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுப்பதுடன், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைப்பதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.