நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன, திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்ததன்படி, 78 வயதான குறித்த முன்னாள் அதிகாரி புதன்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த செனவிரத்னவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கலல்கொட பகுதியைச் சேர்ந்தவரான இவர், நிதி மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.