2023ம் ஆண்டு சிறுநீரக சத்திரகிசிச்சையின் பின்னர் உயிரிழந்த இரண்டு வயது சிறுவனின் சிறுநீரகங்கள் காணாமல்போனமை குறித்து சுகாதார அமைச்சு பதிலளிக்கவேண்டும் என கோரி சிறுவனின் குடும்பத்தவர்கள் கொழும்பில் சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹம்தி பஸ்லிம் என்ற சிறுவன் கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்தான்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சத்திரசிகிச்சையின் பின்னர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு இரகசியமாக சென்ற மருத்துவர் நவீன் விஜயக்கோனின் படத்துடனான பதாகைகளுடன் காணப்பட்டதுடன் சுகாதார அமைச்சு வாக்குறுதியளி;த்த விசாரணை அறிக்கைகள் எங்கே என கேள்வி எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் பிள்ளைக்கு என்ன நடந்தது என சுகாதார அமைச்சு தெரிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
பஸ்லிம் குழந்தையாகயிருந்தபோதே அவனது சிறுநீரக தொகுதியில் தொற்றுகாணப்பட்டதாகவும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் அவனது சிறுநீரகம் முற்றாக செயல் இழந்து 9 வீதமே இயங்குவது தெரியவந்ததாகவும் வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக காணப்பட்டதாகவும் இடது சிறுநீரகத்தை அகற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் விஜயகோன் டிசம்பர் 2022 24ம் திகதி சத்திரசிகிச்சையை மேற்கொண்டார்,அதன் பின்னர் அந்த சிறுவன் சிறுநீரகம் கழிக்க முடியாத நிலையேற்பட்டது, பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவனது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்தது.
ஆனால் பெற்றோர் இந்த விளக்கத்தை நிராகரித்தனர். ஆரம்பகட்டப் பரிசோதனைகளில் வயிற்றுப் பகுதியில் இரண்டு சிறுநீரகங்களும் தனித்தனியாக அமைந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சத்
சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக 2023 ஜூலை 28 அன்று உயிரிழப்பதற்கு முன்னர் ஃபஸ்லிம் ஏழு மாதங்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தான்.
சத்திரசிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டமை பிரேதப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அகற்றப்பட்ட அந்த உறுப்புகளை வைத்தியசாலை அதிகாரிகளால் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதும் நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் சத்திரசிகிச்சை இடம்பெற்று குறுகிய காலத்திலேயே வைத்தியர் விஜேகோன் அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றமையும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.