கஸ்ஸப்ப தேரர் மருத்துவமனையில் பொலிஸாரை மிரட்டுவதை காண்பிக்கும் வீடியோவொன்று வெளியாகியுள்ளது.
ருவான்வெலிசாயவிற்கு அருகில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பொலிஸாரை மிரட்டுவதை காண்பிக்கும் வீடியோவே வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட வீடியோவில் தேரர் மருத்துவமனை கட்டிலில் காணப்படுகின்றார் அவரை சுற்றி மருத்துவர்கள் தாதிமார் பொலிஸார் காணப்படுகின்றனர்
அவ்வேளை அவர் தகாதவார்த்தைகளால் பொலிஸாரை நிந்திப்பதுடன் எச்சரிக்கையும் விடுக்கின்றார்.
அநுராதபுரம் ருவன்வெலி மகா சாயாவிற்கு அருகில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸபதேரர் உட்பட உட்பட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அநுராதபுரம் நீதவான் விசேட உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பலாங்கொட கஸ்ஸபவிற்கு மேலதிகமாக மேலும் மூன்று பௌத்த பிக்குகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்