ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க சமர்ப்பித்துள்ள 2027ம் ஆண்டிற்கான வரவுசெலவுதிட்டத்தை வரவேற்றுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்துவதே கொள்கை ரீதியான அர்ப்பணிப்புகளை முதலீடு ஏற்றுமதி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியாக மாற்றுவதற்கு மிகவும் அவசியமான விடயம் என தெரிவித்துள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளதாவது
2027 ம் ஆண்டிற்கான வரவுசெலவுதிட்டம் கொள்கை தொடர்ச்சி நுண்பொருளாதார ஸ்திரதன்மை நிதி ஒழுக்கம் ஆகியவற்றை பேணுகின்ற அதேவேளை பொருளாதார மாற்றத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகின்றது.
சர்வதேச நாணயநிதியத்துடன் அடுத்த கட்ட திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படவேண்டிய விடயம்.
எனினும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் காணிமற்றும் தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும் பொதுக்கொள்முதல் முறைகளை மேம்படுத்துவதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும்.
சுற்றுலா விவசாயம் வணிக செயலாக்கம் போன்ற துறைகளில் காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை வெளிக்கொணர இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகள் அவசியம் என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
(ரி)