செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்கும் தேவையை நிறைவேற்றும் விதமாகவே பேராசிரியர் ராஜ் சோமதேவா  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.-கஜேந்திரன்

பேராசிரியர் ராஜ்சோமதேவ செம்மணி மனித புதைகுழி தொடர்பாக வெளியிட்ட அறிக்கை இனப்படுகொலை செய்த அரசை பாதுகாக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஒன்றாகும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

ராஜ்சோமதேவவின் அறிக்கையை கண்டித்தும் நிராகரித்தும் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில் தலைமை வகித்துச் செயல்பட்ட சிங்களப் பேராசிரியரான ராஜ் சோமதேவா, சமீபத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய மனித அவலத்தையும், இனப்படுகொலையையும் மூடி மறைக்கும் வகையிலும், இனவாத அடிப்படையிலும் பக்கச்சார்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, அதனைக் கண்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் தரப்பினர் இணைந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் முடிவில், பேராசிரியரின் அறிக்கையின் நகல்களும் அவரது கொடும்பாவியும் பொதுமக்களால் எரியூட்டப்பட்டன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கமாக நாங்களும் இந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இது முழுமையாக இனப்படுகொலை செய்த அரசைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகும். குறிப்பாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்றும், சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவேன் என்றும் கூறித் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார். அதேவேளையில், தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில், போர் குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ராணுவ சிப்பாயையும் தான் நீதிமன்றத்தின் முன் நிறுத்த மாட்டேன் என்று அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

சிங்கள மக்களுக்கு வழங்கிய அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்கும் தேவையை நிறைவேற்றும் விதமாகவே பேராசிரியர் ராஜ் சோமதேவா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். நாட்டின் எந்தவொரு பெரும்பான்மை இன ஆட்சியாளரின் கீழும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்பதையும், உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும், சுயாதீனமானவர்கள் எனக் கூறப்படும் சிங்களப் புத்திஜீவிகள் கூட சுதந்திரமாகச் செயல்பட மாட்டார்கள் என்பதற்கு இந்த அறிக்கை மிகச் சிறந்த சான்றாகும். அனுரகுமார அரசாங்கத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, அரசாங்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இவர் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதே எமது கருத்தாகும்.

இன்று அனுரகுமார திசாநாயக்க தென்பகுதியில் ஊழல் செய்த ஆட்சியாளர்களைத் தண்டிப்பதாகப் பல நடவடிக்கைகளை எடுத்தாலும், தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை செய்தவர்களை  பாதுகாக்கவே அவர் முற்படுகிறார். இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினரையும், அதற்குக் கட்டளையிட்ட ஆட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கே அவர் தயாராக இருக்கிறார்

ஆகவே, இந்த அறிக்கையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிப்பதுடன், செம்மணி விவகாரம் தொடர்பாக முழுமையான சர்வதேச குற்றவியல் விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gnasa
ஞானசார தேரரின் நான்கு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்-தீர்ப்பில் நீதியரசர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் என்ன?
gajendran
நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
ship on fire
ஹோர்முஸ்நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: பற்றி எரியும் தீ
TRUMP ZI PUTIN
சீனாவில் டிரம்ப் புடின் சந்திப்பு
carney no
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இழுபறி: ஆசிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி
court-judge-hammer-gavel-696x398
கிரிஷ் வழக்கு – நாமலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு இடைக்கால தடை
shashi11
சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
gnasaraa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் சிறைத்தண்டனை உறுதி -மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு; நாளை குற்றப்பத்திரிகை கையளிப்பு
parliment
ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குறித்த ஹர்ஷ டி சில்வாவின் கருத்து: நாடாளுமன்றத்தில் காரசாரமான வாக்குவாதம்