கிரிஷ் வழக்கு – நாமலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு இடைக்கால தடை

சர்ச்சைக்குரிய கிரிஷ் பணபரிவர்த்தனை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதானநீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணையை  இடைநிறுத்தி கொழும்பு மேல்நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவை பிறப்பித்துள்ளது.
நாமல்ராஜபக்சவின் பெற்றோரின் உடல்நிலையை காரணம்காட்டி அவரை விடுதலை செய்யவேண்டும் என அவரது சட்டத்தரணிகள் விண்ணப்பித்திருந்தனர் . இலஞ்ச ஊழல் ஆணைககுழு இதற்கு கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது.
எனினும் நாமல்ராஜபக்சவை பிணையில் விடுதலை   செய்யுமாறு கொழும்பு பிரதானநீதவான் நீதிமன்றம் கடந்த 3ம் திகதி உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கொழும்பு பிரதானநீதவான் நீதிமன்றத்தின் இந்த பிணை உத்தரவை இரத்துசெய்யக்கோரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த மேல்நீதிமன்ற நீதிபதி நீதவான் நீதிமன்றத்தின் பிணை உத்தரவை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gnasa
ஞானசார தேரரின் நான்கு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்-தீர்ப்பில் நீதியரசர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் என்ன?
gajendran
நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
ship on fire
ஹோர்முஸ்நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: பற்றி எரியும் தீ
TRUMP ZI PUTIN
சீனாவில் டிரம்ப் புடின் சந்திப்பு
carney no
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இழுபறி: ஆசிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி
shashi11
சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
gnasaraa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் சிறைத்தண்டனை உறுதி -மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
gajendran
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்கும் தேவையை நிறைவேற்றும் விதமாகவே பேராசிரியர் ராஜ் சோமதேவா  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.-கஜேந்திரன்
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு; நாளை குற்றப்பத்திரிகை கையளிப்பு
parliment
ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குறித்த ஹர்ஷ டி சில்வாவின் கருத்து: நாடாளுமன்றத்தில் காரசாரமான வாக்குவாதம்