சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சுஷி வீரவன்ச தனது தண்டனைக்கு எதிராக  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கொழும்பு உயர்நீதிமன்றம் தாக்கல் செய்துள்ளது.
முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டினை விசாரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் 2022ம் ஆண்டு சஷி வீரவன்சவுக்கு இரண்டுவருட சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்திருந்தார். எனினும் 2026-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் திகதி அவரது மனுவைத் தள்ளுபடி செய்த மேல் நீதிமன்றம் நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்தது.

: மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் அவரது மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பையும் இரண்டு வருட சிறைத்தண்டனையையும் உறுதி செய்துள்ளது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gnasa
ஞானசார தேரரின் நான்கு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்-தீர்ப்பில் நீதியரசர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் என்ன?
gajendran
நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
ship on fire
ஹோர்முஸ்நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: பற்றி எரியும் தீ
TRUMP ZI PUTIN
சீனாவில் டிரம்ப் புடின் சந்திப்பு
carney no
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இழுபறி: ஆசிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி
court-judge-hammer-gavel-696x398
கிரிஷ் வழக்கு – நாமலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு இடைக்கால தடை
gnasaraa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் சிறைத்தண்டனை உறுதி -மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
gajendran
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்கும் தேவையை நிறைவேற்றும் விதமாகவே பேராசிரியர் ராஜ் சோமதேவா  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.-கஜேந்திரன்
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு; நாளை குற்றப்பத்திரிகை கையளிப்பு
parliment
ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குறித்த ஹர்ஷ டி சில்வாவின் கருத்து: நாடாளுமன்றத்தில் காரசாரமான வாக்குவாதம்