கொழும்பு – நவம்பர் 19
இஸ்லாமிய மதத்திற்கு அவமானம் விளைவிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட நான்குவருட கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும் 2024ம் ஆண்டில் கொழும்பு மேன்நீதிமன்றத்தினால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசாரதேரர் தாக்கல் செய்துள்ள மனுவை மேல்நீதிடன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2016ம் ஆண்டு கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள விகாரை தொடர்பில் செய்தியாளர் மாநாட்டில் ஞானசாரதேரர் ஆற்றிய உரையாற்றிய இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் விதத்தில் இனங்களிடையே நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.இதனை தொடர்ந்து சட்டமா அதிபர் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கினை விசாரித்த கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து ஞானசார தேரருக்கு 4 வருட சிறைத்தண்டii விதித்து தீர்ப்பளித்திருந்தது.