எந்தத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் வழமை போன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்..! ஏற்பாட்டாளர்கள் உறுதி

யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது
வேலணை பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன்தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எந்த தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் உணர்வெழுச்சியாக வழமை போன்று இம்முறையும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்கு தனிநபர் உரிமை கோரியுள்ளதுடன், தமது காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க கூடாது எனவும் , அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸாரினால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வழக்கின் நீதிமன்ற கட்டளை தமக்கு சாதகமாக அமைந்தால் , துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் , கட்டளை தமக்கு எதிராக கிடைக்கபெற்றால் , துயிலுமில்லம் முன்பாக உள்ள , வேலணை பிரதேச சபைக்கு சொந்தமான காணிக்குள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal courts
எயார்பஸ் (Airbus) வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு; டிசம்பர் 2 வரை விளக்கமறியல் நீடிப்பு
1000018452-533x400
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படும் என செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை
rohinya1
ரோஹிங்யாமக்களுக்கு எதிராக 'இனப்படுகொலை நோக்குடன்' மியன்மார் செயல்பட்டது: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
court-judge-hammer-gavel-696x398
2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பு கடத்தல் மற்றும் கொலை வழக்கு: ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் எண்மருக்கு மரண தண்டனை
sajith ff
அரசாங்கம் தற்போது தொழில்சங்க தலைவர்களை இலக்குவைத்து செயற்படுகின்றது – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன- சஜித்
monks fight
அழிவின் தீப்பிழம்புகள்: இலங்கையை மீண்டும் எரிப்பதற்கு முன் அந்தத் தீப்பொறியை அணைத்திடுங்கள்
JAGATH WI
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நம்பகத்தன்மை மீதான கண்காணிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சபாநாயகர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்
gnasa
ஞானசார தேரரின் நான்கு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்-தீர்ப்பில் நீதியரசர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் என்ன?
gajendran
நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
ship on fire
ஹோர்முஸ்நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: பற்றி எரியும் தீ