ரோஹிங்யாமக்களுக்கு எதிராக ‘இனப்படுகொலை நோக்குடன்’ மியன்மார் செயல்பட்டது: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

2017ம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த இராணுவநடவடிக்கைகளில் பத்தாயிரம் ரோஹிங்யா இனமக்கள் கொல்லப்பட்ட படுகொலைகளில் மியன்மார் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்பட்டது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
730000க்கும் அதிகமான ரோகிங்யா இன மக்கள் அண்டை நாடான பங்களாதேசிற்கு தப்பிச்செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்திய  இரணுவ அடக்குமுறை தொடர்பான தீர்ப்பை நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கியுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதி யூஜி இவாசவா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது
International Court of Justice (ICJ) President Iwasawa Yuji  sat on a panel of judges

மியன்மார் படையினர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரோகிங்யா இனத்தவர்களை கொலை செய்ததை ஆதாரங்கள் நிரூபித்துள்ளன.
மியன்மார் படையினர் ஆயிரக்கணக்கான ரோகிங்யா இனத்தவர்களை படுகொலை செய்ததுடன் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார்கள், பங்களாதேசிற்கு தப்பிச்செல்ல முயன்றவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
நீதிமன்றம் குறிப்பிட்ட சில சம்பவங்களில் மியன்மார் இனப்படுகொலை நோக்கத்துடனேயே செயற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்

ரோஹிங்யாமக்களை அழிக்க மியன்மார் முயற்சித்ததாகக் குற்றம் சாட்டி 2019-ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா  இந்த வழக்கைத் தாக்கல் செய்தது. 1948-ஆம் ஆண்டின் இனப்படுகொலை உடன்படிக்கையை  மியன்மார் மீறியுள்ளது எனத் தீர்ப்பளிக்குமாறும் ரோஹிஞ்சாக்களை இலக்கு வைக்கும் சட்டவிரோதச் செயல்களை நிறுத்துமாறு உத்தரவிடுமாறும் இனப்படுகொலைக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதை உறுதி செய்யுமாறும் காம்பியா கோரியிருந்தது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal courts
எயார்பஸ் (Airbus) வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு; டிசம்பர் 2 வரை விளக்கமறியல் நீடிப்பு
1000018452-533x400
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படும் என செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை
court-judge-hammer-gavel-696x398
2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பு கடத்தல் மற்றும் கொலை வழக்கு: ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் எண்மருக்கு மரண தண்டனை
maveerar thu1
எந்தத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் வழமை போன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்..! ஏற்பாட்டாளர்கள் உறுதி
sajith ff
அரசாங்கம் தற்போது தொழில்சங்க தலைவர்களை இலக்குவைத்து செயற்படுகின்றது – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன- சஜித்
monks fight
அழிவின் தீப்பிழம்புகள்: இலங்கையை மீண்டும் எரிப்பதற்கு முன் அந்தத் தீப்பொறியை அணைத்திடுங்கள்
JAGATH WI
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நம்பகத்தன்மை மீதான கண்காணிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சபாநாயகர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்
gnasa
ஞானசார தேரரின் நான்கு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்-தீர்ப்பில் நீதியரசர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் என்ன?
gajendran
நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
ship on fire
ஹோர்முஸ்நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: பற்றி எரியும் தீ