செம்மணியில் மீட்கப்பட்ட இராணுவ உபகரணம் தொடர்பில் சோமதேவ மௌனித்தமை ஏன்? – சட்டத்தரணி ரட்ணவேல் கேள்வி

செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட இராணுவ உபகரணம் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ மௌனித்தமை ஏன் எனச் சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“செம்மணிப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ உறுதியான தகவல் எதையும் குறிப்பிடவில்லை. ஆயினும், அவரின் அறிக்கையின் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் 608 பேர் காணாமல் ஆக்கப்பட்டதுடன், 54 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

அத்துடன், பேராசிரியர் ராஜ் சோமதேவ வழங்கிய அறிக்கையில் உள்ள பல விடயங்களுடன் நாங்கள் உடன்படவில்லை. தனது முன்னைய அறிக்கைகளில் பயன்படுத்திய ஒளிப்படங்களை இறுதியாக வெளியிட்ட அறிக்கையில் வேறு கோணங்களில் அவர் பயன்படுத்தியுள்ளார். அவரின் இந்த நடவடிக்கை எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அத்துடன், செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து இராணுவ உபகரணமொன்றும் மீட்கப்பட்டிருந்தது. அந்த உபகரணத்தை மையப்படுத்திப் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் இராணுவப் பகுதிகளில் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாக உள்ள நிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவ அந்த இராணுவ உபகரணம் தொடர்பில் எதுவுமே குறிப்பிடவில்லை,” என அவர் தெரிவித்தார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

images (26)
ஜனாதிபதி அனுர குமாரவை தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதால் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கின்றோம் – பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரன்!
police111
சுன்னாக பொலிஸாரின் அச்சுறுத்தம் செயற்பாடு- விசாரணை நடத்துமாறு பிரதமர் அலுவலகம் பணிப்புரை
cid
செம்மணியை அடையாளம் காட்டும் நிலையில் சோமரத்ன இல்லையாம்!நீதிமன்றத்தில் சி.ஐ.டி. தெரிவிப்பு
iMRANKHAN-GETTY-1
பாக்கிஸ்தானுடனான உறவுகள் குறித்து கரிசனை- இம்ரான்கான் விடுதலைப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிராகரிப்பு
nandalal
இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க
court-judge-hammer-gavel-696x398
சாட்டி துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்குத் தடை-பொலீசாரின் வழக்குதள்ளுபடி
FB_IMG_1795110396606-768x795
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாராட்டு
bimal
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தைத் தொழில்முறை மற்றும் கண்ணியமான முறையில் நிறைவு செய்த ஒரே அரசாங்கம் NPP அரசாங்கமே – பிமல் ரத்நாயக்க
police cell
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 36 வயது நபர் பொலிஸ் காவலில் திடீர் சுகவீனமுற்று மரணம்
court-judge-hammer-gavel-696x398
நாமலின் க்ரிஷ் (Krrish) வழக்கு: டிசம்பர் 1 ஆம் திகதிக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு