செம்மணிப் புதைகுழியை அடையாளம் காண்பிக்கும் நிலையில் சோமரத்ன ராஜபக்ச தற்போது இல்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்களால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தில் மேலும் கூறப்பட்டதாவது:
செம்மணிப் புதைகுழி தொடர்பில் சோமரத்ன ராஜபக்சவிடம் விசாரணை நடத்தினோம். விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் படையினர் கொன்று புதைத்தனர் என்ற விடயத்தை அவர் கூறினார். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தன்னால் செம்மணிப் புதைகுழியை அடையாளம் காட்ட முடியாது என்றும் அவர் கூறினார் – என்றனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் இந்தக் கருத்தை கடுமையாக ஆட்சேபித்த சட்டத்தரணி சுமந்திரன், சோமரத்ன ராஜபக்ச சிறையில் இருந்தவாறு தனது மனைவிக்கு அனுப்பிய கடிதத்தில் செம்மணிப் புதைகுழியின் வரைபடத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கருத்துடன் தாம் உடன்படவில்லை என்று கூறினார். (ம-26)