முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணம்என்ன? பைசர் முஸ்தபா 

முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (Protection of the State from Terrorism Bill) குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இச்சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் அரசியல் சுதந்திரம், தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 1979ஆம் ஆண்டு தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பின்னர் திருத்தம் ஒன்றின் மூலம் நிரந்தரமாக்கப்பட்டதாகவும், அது பொதுமக்களின் சுதந்திரத்திற்குப் பெரும் சவாலாக அமைந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 47 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்த போதிலும், மாறிமாறி வந்த அரசாங்கங்கள் அதனை அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்தில் பல்வேறு கரிசனைக்குரிய விடயங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டநாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, அரசியல், கருத்தியல் மற்றும் பொருளாதார உரிமைகள், அத்துடன் அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாடுகள் (Dissent) ஆகியவையும் இதன் வரம்பிற்குள் உள்ளடக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாக வாதிட்டார்.

இச்சட்டத்தின் ஏற்பாடுகள் அரசியல் பழிவாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடும் எனவும், தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்த அவர், இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சரத்துக்களை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், சட்டத்தரணிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான இரகசியத்தன்மைக்கு (Lawyer-client privilege) இச்சட்டமூலம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் அவர் தனது கரிசனையை வெளிப்படுத்தினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

cbk 11
ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை தவிர வேறு எந்த கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை