இலங்கையின் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களும் தற்போது செயல் இழந்த நிலையில் உள்ளதாக நாட்டின் பேரிடர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் சம்பத்கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
இந்த கோபுரங்களிற்கு சிக்னல்களை வழங்கிய செய்மதி தொடர்பான பிரச்சினையால் மூன்று வருடங்களிற்கு முன்னரே இவை செயல்இழந்துவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
இவற்றை மீள இயங்கச்செய்வது மிகவும் கடினமான பணி நாங்கள் மாத்திரம் இதனை தனித்து செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அவற்றை இயங்கச்செய்வதற்காக வெளிநாடுகளை சேர்ந்த அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை சுனாமி எச்சரிக்கைக்காக பின்பற்றப்படும் முறைகளில் ஒன்று சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் இன்னமும் 15 வழிமுறைகள் உள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
ஒருமுறையை மாத்திரம் நம்பியிருக்க முடியாது என்பதால் நாங்கள் பல முறைகளை பின்பற்றுகின்றோம்,கரையோரத்தில் உள்ள மக்களை எச்சரிப்பதற்கான மணி கோபுரங்கள் உள்ளன,ஆனால் இவை சில மைல் தூரத்திற்குள்ளேயே பலன் அளிக்கும் முழுகரையோரத்திற்கும் இவை போதுமானவையல்ல நாங்கள் பழுதடைந்த கோபுரங்களை திருத்த முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
