கொழும்பிலும் அதனை சுற்றியுள்ள நகரங்களிலும் பெண்கள் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரித்து வருவதாக மகளிர்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சமீபத்தைய தகவல்கள் மூலம் இந்த கவலை தரும்போக்கு குறித்து தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் பெண்களும் யுவதிகளும் அச்சம் தரும் வேகத்தில் போதைப்பொருளிற்கு அடிமையாகிவருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
பொலிஸாரினதும் ஏனைய தரப்பினதும் புள்ளிவிபரங்கள் பெண்கள் ஐஸ் உட்பட பல்வேறு வகையான போதைப்பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதை காண்பித்துள்ளதாக மகளிர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப்பெண்கள் போதைப்பொருளை பயன்படுத்தினால் அது வயிற்றில் உள்ள கருவின் உடல் உள நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள அமைச்சர்
இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக விசேட திட்டத்தினை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
