உங்ககிட்ட இந்த திறமை இருக்கா? Zoho-வில் வேலை ரெடி: ஸ்ரீதர் வேம்புவே சொல்லிட்டாரு..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான ஜோஹோ செயல்பட்டு வருகிறது. அண்மை காலமாக இந்தியாவில் ஜோஹோ நிறுவன தயாரிப்புகளை மக்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் பலரும் தாங்கள் ஜோஹோ மெயிலை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக அண்மையில் அறிவித்தனர். வாட்ஸ் அப் போலவே ஜோஹோ உருவாக்கிய அரட்டை செயலி கடந்த மாதம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக இந்தியர்கள் பலரும் அரட்டை செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும், ஜோஹோவின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறார். சமூகவலைதளங்களில் இவர் வெளியிட கூடிய பதிவு லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை பெறும். ஜோஹோவை பொறுத்தவரை ஊழியர்களுக்கு நிறுவன பங்கில் ஒரு பகுதி, சம்பளம், போனஸ் என வாரி வழங்குகிறது. பலரும் எப்படியாவது இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என எண்ணுகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு ஜோஹோவில் வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோவின் ஃப்ளாக்ஷிப் இமெயில் சேவையான ஜோஹோ மெயில் ஆண்டுக்கு 100 மில்லியன் வருவாய் என்பதை நெருங்கி விட்டதாகவும் இதன் 70 சதவீத வணிகம் என்பது இந்தியாவிற்கு வெளியில் தான் நடக்கிறது என்றும் பதிவு செய்திருந்தார்.

உலகிலேயே பாதுகாப்பான ஈமெயில் ப்ரொவைடராக ஜோஹோ மெயில் மாறி இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்தியாவை பெருமைப்படுத்துகிறோம் எங்களின் வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியடைய செய்கிறோம் என குறிப்பிட்டு இருக்கும் ஸ்ரீதர் தங்களின் anti spam system எவ்வாறு செயல்படுகிறது இதன் நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் உறுதி செய்யும் படத்தையும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜோஹோ மெயில் malware மற்றும் Phishingh mailகளை 99% பிளாக் செய்வதாகவும் இதன் விபி ஸ்பேம் சர்டிபிகேஷன் மதிப்பு 99.329 என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து பதிவு செய்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு , ஜோஹோ நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் தானே தனிப்பட்ட முறையில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும், மிகச்சிறந்த வலுவான கணித திறன் கொண்ட நபர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

நிறுவனத்தில் என்னுடைய பெரும்பாலான வேலை என்பது தொழில்நுட்ப பாதையை கண்டறிவதாக தான் இருந்திருக்கிறது, எங்களுக்கு தற்போது கணிதத்தில் மிகச்சிறந்த திறன் கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள் உங்களுக்கு அந்த திறன் இருந்தால் எனக்கே நேரடியாக மெசேஜ் அனுப்புங்கள் என கூறியிருக்கிறார். கணித சமன்பாடுகளை கண்டால் உங்களுக்கு அச்சமில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் வேலைவாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்