கூகுள் இல்லாமல் இந்தியா இயங்குமா? – ஸ்ரீதர் வேம்பு, ஹர்ஷ் கோயன்கா பதிவால் பரபரப்பு..

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியர்களை பொறுத்தவரை புதிய புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதில் திறமை கொண்டவர்கள்.

இதனால் தான் பல்வேறு டெக் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்திய சந்தையை குறிவைக்கின்றன. அமெரிக்க டெக் நிறுவனங்களின் பெரிய சந்தையே இந்தியா தான். தற்போது எங்கு பார்த்தாலும் ஸ்மார்ட் போன்கள், இன்டர்நெட் இணைப்பு, கூகுள் , இன்ஸ்டாகிராம் , யூடியூப் என யார் பார்த்தாலும் கையில் ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு இந்த தளங்களை பயன்படுத்துகிறார்கள்.


இவை அனைத்து அமெரிக்க டெக் நிறுவனங்களின் செயலிகள் தான். ஒரு வேளை அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய எந்த ஒரு டெக் சேவைகளையும் வழங்கக்கூடாது என கூகுள் , மெடா. ஓபன் ஏஐ உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்தால் என்ன ஆகும் என்ற ஒரு கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

ஆர்பிஜி குழுமத்தின் தலைவரான் ஹர்ஷ் கோயன்கா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்” கற்பனை செய்து பாருங்கள் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா டெக் நிறுவனங்களான கூகுள், இன்ஸ்டாகிராம் அல்லது சாட் ஜிபிடி போன்றவை இந்தியாவில் சேவை வழங்கக்கூடாது என தடை விதித்தால் என்ன ஆகும்?, நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது, இல்லையா ? இதன் விளைவு எவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என தற்போதைய சிந்தித்து பாருங்கள் நம்மிடம் பிளான் பி இருக்கிறதா ?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவருடைய இந்த பதிவுக்கு பதில் அளித்து இருக்கும் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு “உங்களுடைய இந்த பதிவை நான் ஏற்கிறேன் இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்களுக்கும் வெளிநாடுகளை தான் நாம் அதிக அளவில் சார்ந்திருக்கிறோம் செயலிகள் மட்டுமல்ல சிப்கள், ஃபேப்கள் , ஓஎஸ்-கள் என பல தொழில்நுட்பங்களுக்கும் நாம் வெளிநாடுகளை தான் அதிகம் சார்ந்து இருக்கிறோம் . இந்தியாவிற்கு National mission for Tech resilience என பத்தாண்டு கால திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் ,அதை உருவாக்க முடியும் ” எனக் கூறியிருக்கிறார் .

இருவருடைய இந்த பதிவும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பி இருக்கிறது . இந்தியாவில் அண்மைக்காலமாக உள்நாட்டு தயாரிப்புகள், உள்நாட்டு செயலிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜிமெயிலுக்கு மாற்றாக ஜோஹோ மெயில், வாட்ஸ் அப்புக்கு மாற்றாக அரட்டை உள்ளிட்ட செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

ஸ்ரீதர் வேம்பு, ஹர்ஷ் கோயன்காவின் பதிவுகளுக்கு பல்வேறு பயனர்களும் எதிர்வினை ஆற்றி இருக்கின்றனர் . ஒரு நபர் கூடிய விரைவில் அமெரிக்க டெக் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து திறன்மிகு ஊழியர்கள் கிடைக்கவில்லை என கவலைப்படத் தொடங்குவார்களோ அப்படி அவர்கள் கவலைப்படும் காலத்தில் இந்தியா டெக் ரீதியாக சுதந்திரம் பெற்றிருக்கும் என கூறுகிறார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்