இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்கு சர்வதேசஅனுபவங்கள் மிகமுக்கியமானவை என தொழில் பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தோஹாவில் இடம்பெற்ற இரண்டாவது சமூக அபிவிருத்திக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
25 வீதமான இலங்கையர்கள் வறுமையின் பிடியில் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் ஏனைய நாடுகளின் அனுபவங்களை பயன்படுத்தி இந்த சவாலை எதிர்கொள்ளமுடியும் நிலைபேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.