உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சப்பாத்துக்களை மாணவர்களிற்கு வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
250 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு வவுச்சர்களுக்கு பதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சப்பாத்துகளை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மேல்மாகணம் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த 1200 பாடசாலைகளின் 145723 மாணவர்களிற்கு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சப்பாத்துக்களை வழங்குவது குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு சப்பாத்து தயாரிப்பாளர்கள் ஒருவருட உத்தரவாதத்துடன் சப்பாத்துக்களை வழங்க இணங்கியுள்ளனர் – ஒரு சப்பாத்தின் விலை 2100 என்ற அடிப்படையில் அவர்கள் வழங்கவுள்ளனர்.
இதன் மூலம் அரசாங்கம் 140 மில்லியன் ரூபாயினை சேமிக்க முடியும்.சேமித்த பணத்தினை பயன்படுத்தி மேலும் இரண்டு மாகாணங்களின் மாணவர்களிற்கு சப்பாத்தினை வழங்கும் திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
