கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த தாய் நான்கு பிள்ளைகள் மற்றும் குடும்ப நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த இலங்கையை சேர்ந்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது.
சந்தேகநபர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
ஒட்டாவாவின் வரலாற்றில் மிக மோசமான குற்றம் என இதனை வர்ணித்துள்ள நீதிபதி தான் அதிர்ச்சியடைந்ததாகவும் சமூகம் முற்றிலும் குழப்பமடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று பெருமளவானவர்கள் காணப்பட்ட நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தங்களின் பாதிப்புகள் குறித்து அறிக்கையொன்றை வாசித்தனர்.
முப்பந்தைந்து வயது தர்சினிஏக்கநாயக்க,இரண்டு மாதம் முதல் ஏழுவயதுவரையிலான நான்கு வயதுடைய பிள்ளைகள் மற்றும் 40வயதுடைய காமினி அமரக்கோன் ஆகியோர் கத்திக்குத்தில் சிக்கி கொல்லப்பட்டனர்.
அவ்வேளை 19 வயது டிசொய்சா கனடாவில் வெளிநாட்டு மாணவனான கல்வி கற்றுக்கொண்டிருந்த அந்த குடும்பத்தின் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
கீழ்மாடியில் அமரக்கோனை கத்தியால் குத்தி கொலை செய்த டிசொய்சா அதன் பின்னர் தனது நண்பரிடம் அந்த குடும்பத்தவர்கள் திகில் படம் பார்த்துவிட்டு அலறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மேல்மாடிக்கு சென்று நான்கு பிள்ளைகளையும் தாயையும் கொலை செய்துள்ளார்.அவ்வேளை தாய் தனது கைக்குழந்தையை கையில் வைத்திருந்தார்.
தனுஸ்க அன்று இரண்டு வேலைகளை செய்துவிட்டு வீடு திரும்பியவேளை டிசொய்சா அவரையும் தாக்கியுள்ளார்.அவர் என்னை பல தடவைகள் கத்தியால் குத்தினார்,முகத்திலும் மார்பிலும் குத்தினார்,நான் மேல்வீட்டில் உள்ள எனது குடும்பத்தினரிடம் தப்பியோட நினைத்தேன் என தனுஸ்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் கதவுகள் மூடியிருந்த தனுஸ்க மீண்டும் என்னை கத்தியால் குத்தினார்,நான் அவரை சமாளித்துவி;ட்டு உடல் முழுவதும் இரத்தத்துடன் குளறியபடி வெளியே தப்பியோடினேன்,பொலிஸாரை அழைத்தேன் அவர்கள் டிசொய்சாவை கைதுசெய்தனர் என தெரிவித்துள்ளார்.
