ஜனாதிபதி நேர்மையான வரவுசெலவுதிட்டத்தினை சமர்ப்பிப்பதற்கு பதில்பொய் மூட்டையை சமர்ப்பித்துள்ளார்- சஜித்

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நாடாளுமன்றத்தில் நேர்மையான வரவுசெலவுதிட்டத்தினை சமர்ப்பிப்பதற்கு பதில் பொய் மூட்டையை சமர்ப்பித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வரவு செலவுதிட்டம் போலியான வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும் அறிக்கைகளை உள்ளடக்கியதாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் வளமான நாட்டிற்கான திட்டம் இல்லை மாறாக மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்ட அரசியல் நாடகம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதிகள் அவர் முன்வைத்துள்ள கொள்கைகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தி முன்வைத்த விடயங்களுடன் மக்கள் ஒப்பிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சஜித்பிரேமதாச அவர்களின் உரைகளிற்கும் வாக்குறுதிகளிற்கும் இடையில் இடைவெளி காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சாந்தமான தொனியில் சிரித்தபடி வரவுசெலவுதிட்ட உரையை ஆற்றினாலும் இந்த வரவு செலவுதிட்டம் பொய்மூட்டையை தவிர வேறு எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச மக்கள் உதவியற்ற நிலையில் இருக்கும்போது அரசாங்கத்தின் உயிhவாழ்தலை அடிப்படையாக கொண்ட ஏமாற்றுதல் மற்றும் நேர்மையின்மை நிறைந்தது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்