அமெரிக்க ஜனாதிபதியின் உரையில் மாற்றங்களை செய்து வெளியிட்ட குற்றச்சாட்டு- பிபிசியின் பணிப்பாளர் நாயகம் செய்தி பிரிவின் தலைவர் இராஜினாமா

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்பின் உரையைத் திருத்தியதன் மூலம் பனோரமா ஆவணப்படம் பார்வையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தித் தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
ஐந்து வருடங்களாக பிபிசியின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய டிம் டேவி பக்கச்சார்பு குறித்த பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்ததுடன் சர்ச்சைகளில் சிக்குண்டிருந்தார்

2021 இல் அமெரிக்காவின் கப்பிட்டல் ஹில்லில் இடம்பெற்ற வன்முறையை வெளிப்படையாக ஊக்குவிக்கும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றியிருந்தார் என காண்பிக்கும் விதத்தில் அவரது உரையை வேண்டுமென்றே பிபிசியின் பனோரமா நிகழ்ச்சி திருத்தி வெளியிட்டமைக்கானஆதாரங்களை டெலிகிராவ் வெளியிட்டிருந்தது.

பிபிசியின் உள்ளக தகவல்களையே டெலிகிராவ் வெளியிட்டிருந்தது.


பிபிசியின் இரு முக்கிய அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்தது மாற்றங்களிற்கு வழிவகுக்கும் என பிரிட்டனின் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள அதேவேளை டொனால்ட் டிரம்ப் இதனை வரவேற்றுள்ளார்.

பிபிசியின் வரலாற்றில் பணிப்பாளர் நாயகமும் செய்தி பிரிவின் தலைவரும் ஒரேநேரத்தில் பதவியை இராஜினாமா செய்திருப்பது இதுவே முதல் தடவை.

எல்லா பொதுநிறுவனங்களையும் போல பிபிசி நூறுவீதம் சரியானது இல்லை என தெரிவித்துள்ள டேவி நாங்கள் எப்போதும் வெளிப்படைதன்மையுடனும்,பொறுப்புக்கூறலுடனும் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு மாத்திரமே எனது பதவி விலகலிற்கு காரணமில்லை பிபிசி நியுஸ் குறித்த தற்போதைய சர்ச்சைகளும் எனது முடிவிற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்

ஓட்டுமொத்தத்தில் பிபிசி சிறப்பாக செயற்படுகின்றது ஆனால் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன பணிப்பாளர் நாயகம் என்ற அடிப்படையில் நான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2021இல் வோசிங்டனில் ஆற்றிய உரையில் டொனால்ட் டிரம்ப் நாங்கள் கப்பிட்டலை நோக்கி நடந்துசெல்லப்போகின்றோம், நாங்கள் எங்கள் துணிச்சலான செனெட்டர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை பாராட்டப்போகின்றோம் ஊக்குவிக்கப்போகின்றோம் என தெரிவித்திருந்தார்.

ஆனால் பனராமாவில் நாங்கள் கப்பிட்டலை நோக்கி நடக்கப்போகின்றோம்,நான் உங்களுடன் இருப்பேன் நாங்கள் போராடுவோம் நரகத்தை போல போராடுவோம் என டிரம்ப் தெரிவிப்பது போல அவரது உரை மாற்றப்பட்டிருந்தது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்