நியாயமான விலை நிர்ணயம் தரப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை மற்றும் மேம்பட்ட நோயாளி பராமரிப்பு ஆகியவற்றின் அவசியத்தை மேற்கோள் காட்டி இலங்கையின் தனியார் சுகாதார துறையை அவசரமாக மாற்றியமைக்க அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து
இலங்கையின் சுகாதார அமைச்சு தனியார் மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் தீவிரகண்காணிப்பிற்கு உட்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களையும் தரப்படுத்தும்போது நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நியாயமான மற்றும் மலிவு கட்டண அமைப்பை அறிமுகப்படுத்த இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
கூடுதலாக மருத்துவ மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளை அமல்படுத்துதல் சரியான பயிற்சி தரங்களைப் பராமரித்தல் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரான பொது புகார்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முறையான பொறிமுறையை உருவாக்கவும் இது அழைப்பு விடுத்துள்ளது – குறைகளை பதிவு செய்வதற்கும் சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்கும் ஒரு ஆன்லைன் தளம் உட்பட.
தனியார் சுகாதார நிறுவனங்களின் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை கடுமையாக்குவதில் அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்