இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் அடுத்தடுத்த நாட்களில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ள நிலையில் இலங்கையின் பாதுகாப்பு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புலனாய்வாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருப்பதால் தீவிரமாக செயற்படுவதால் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் ஸ்திரமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் இல்லை,இலங்கையின் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்தும் உஷார் நிலையில் உள்ளன,எங்கள் முப்படையினரும் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பு குறித்து கவனமாக உள்ளனர்,பாதுகாப்பு குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்